azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

When one has attained the state of realising Divinity in every being, when every instrument of knowledge brings the experience of that Divinity and when It alone is seen, heard, tasted, smelt and touched, man undoubtedly becomes a part of the Body of God and lives in Him and with Him. This path is not laid down or recommended for the extraordinary among men alone. It is within the reach of all, for all have the hunger for God. When this duty to your own progress is taken up, you will get a new strength at the very first step; you will experience a new and purer joy; you will be refreshed by a new holiness. Therefore each person should pursue one's own dharma (individual duty). You should plan your life according to the spiritual foundations of your culture and listen to the voice of God.( Geetha Vahini Ch.1)
ஒருவர் எப்போது,ஒவ்வொரு ஜீவ ராசியிலும் இறைவனை உணரும் நிலையை அடைகிறாரோ, எப்போது தனது ஒவ்வொரு அறிவும் இறைவனைப் பற்றிய அனுபவத்தை அளிக்கிறதோ, எப்போது தான் பார்ப்பது,கேட்பது,வாசனையை உணர்வது,ருசிப்பது மற்றும் தொடுவது அனைத்திலும் அந்த ஒன்றையே காண்கிறாரோ,அப்போது அந்த மனிதர் சந்தேகத்திற்கிடமின்றி இறைவனது உடலின் ஒரு அங்கமாகி, அவனுள், அவனுடன் வாழ்கிறார். இந்தப் பாதை மனிதரில் தலைசிறந்தவர்களுக்காக மட்டும் விதிக்கப் பட்டதோ அல்லது அறிவுறுத்தப் பட்டதோ அல்ல. இது அனைவராலும் அடையப்படக்கூடிய ஒன்று, ஏனெனில் அனைவருக்கும் இறைவனைப் பற்றிய வேட்கை உள்ளது. எப்போது இதில் உன்னுடைய முன்னேற்றத்திற்கான, இந்தக் கடமையை கையாளுகிறாயோ,முதல் படியிலேயே,ஒரு புதிய சக்தியைப் பெறுவாய்; ஒரு புதிய மற்றும் தூய்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பாய்; ஒரு புதிய புனிதத்துவத்தால் புத்துணர்வு கொள்வாய். எனவே ஒவ்வொருவரும் தனது ஸ்வதர்மத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். உன்னுடைய வாழ்க்கையை, உனது கலாசாரத்தின் ஆன்மீக அடிப்படைகளுக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் மற்றும் இறைவனது குரலைக் கேட்க வேண்டும்.