azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

This day you have resolved to imbibe Divine Bliss by reciting the glory of God in chorus and with music, continuously for twenty-four hours (Akhanda Bhajan). This programme will yield good results. For in this busy age of fear and anxiety, the remembrance of God and the repetition of His name is the single means of liberation that is accessible to all. Bhajan (devotional singing in a group) is more important than even bhojan (food). Bhajan is a good disciplinary process by which desire and anger can be kept away. This day-long bhajan will generate divine vibrations and purify. I bless those who breathe this vibration to be healthier and more upright in their behaviour. Be united in remembering God and encourage one another as you proceed along the path; then success is assured.( - Divine Discourse, Apr 12, 1976.)
இன்று இறைவனின் புகழை அனைவரும் ஒன்றிணைந்து சங்கீதத்துடன் அகண்ட பஜனாக தொடர்ந்து 24 மணி நேரம் செய்து தெய்வீக ஆனந்தத்தை உட்கொள்வதாக சங்கல்பம் எடுத்துள்ளீர்கள். இந்த நிகழ்ச்சி நல்ல பலன்களைத் தரும். கவலையும், பயமும் கலந்த பரபரப்பான இந்த யுகத்தில், இறைவனை எண்ணுவதும், நாமஸங்கீர்த்தனம் செய்வதுமே விடுதலை அடைவதற்கு அனைவருக்கும் எளிதான ஒரே வழி. பஜன் என்பது போஜனை( சாப்பாடு) விட முக்கியமானது. பஜனை ஆசையையும், கோபத்தையும் தவிர்ப்பதற்கான ஒழுங்கான வழி முறை. நாள் முழுவதும் செய்யப் படும் இந்த பஜன் தெய்வீக அதிர்வுகளை ஏற்படுத்தி,தூய்மைப் படுத்தும். இந்த அதிர்வுகளை நுகர்வோர் அனைவரும் ஆரோக்கியத்துடனும்,தங்களது நடத்தையில் அதிக நேர்மையுடனும் இருக்க நான் ஆசீர்வதிக்கிறேன். இறைவனை எண்ணுவதில் ஒற்றுமையுடன் இருந்து, நீங்கள் செல்லும் பாதையில் ஒருவருக்கு ஒருவர் ஊக்கமளியுங்கள்.;பின்னர் வெற்றி நிச்சயம்.