azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The power of the divine name is unparalleled. People often take it lightly; that is a mistake. God's name is the real diamond - 'Die mind'. Keep it safe and secure. Whoever does namasmarana, (Repetition of God’s Name) whatever be the name they take and wherever they are, their life will be sanctified and they will be free from sin. Do not be too concerned about the tune and rhythm (raga and thala). Chant the divine name wholeheartedly and with complete faith. Faith develops love for God. Namasankirtan (singing of God's name) when done with absolute concentration and steady faith like a yogi, will help achieve great transformation. Fix your mind steadily on the divine name and attain bliss.
- Divine Discourse, Nov 13, 2007.
- Divine Discourse, Nov 13, 2007.
இறைவனது நாமத்தின் சக்திக்கு ஈடு இணையே கிடையாது. மக்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; இது தவறு. இறைவனது நாமமே உண்மையான வைரக்கல் (டைமண்ட்- ''டை''(இறப்பு) ,''மைண்ட்''(மனம்). அதை பாதுகாப்பாகவும்,பத்திரமாகவும் வைத்திருங்கள்.எங்கிருந்தாலும், எந்த நாமத்தைச் சொன்னாலும்,நாமஸ்மரணை செய்பவர்களது வாழ்க்கை புனிதமடைந்து அவர்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். ராக, தாளங்களைப் பற்றி அதிகமாகக் கவலைப் படாதீர்கள். இறை நாமத்தை முழு மனதோடும்,முழு நம்பிக்கையோடும் ஸ்மரணை செய்யுங்கள். நம்பிக்கை இறைவன் மீது அன்பை வளர்க்கும்.நாம ஸங்கீர்த்தனத்தை முழு முனைப்புடனும்,யோகியைப் போன்ற நிலையான நம்பிக்கையோடும் செய்வது தலைசிறந்த மன மாற்றத்தை அடைய உதவும்.உங்களது மனதை இறை நாமத்தில் நிலை கொள்ளச் செய்து பேரானந்தத்தைப் பெறுங்கள்.