azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as fish can live only when it is immersed in water, so too man is an animal that can live well only when immersed in bliss (Ananda). One must have Ananda not only at home and society but more importantly, in the heart as well. In fact the Ananda in the heart spreads joy all around. The heart is the spring of bliss which has to be charged by constant meditation, recitation and the intermittent dwelling on the glory, the grace and the manifestations of the Lord (Smarana, Chethana and Manana). Without giving way to doubt or despair, hold fast to the goal and never turn back. The one devoted to God knows no failure. The Name of the Lord, if taken sincerely will help you overcome all obstacles. When the Saviour is by your side, why doubt whether you will be saved? (Divine Discourse, Nov 23, 1961.)
எவ்வாறு மீனானது நீரில் மூழ்கி இருந்தால் தான் வாழ முடியுமோ,அவ்வாறே மனிதனும் ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தால் தான் நன்றாக வாழக்கூடிய விலங்கு போன்றவன். ஒருவருக்கு வீட்டில் ,மற்றும் சமூகத்தில் மட்டும் ஆனந்தம் இருந்தால் போதாது, முக்கியமாக அவரது இதயத்திலும் ஆனந்தம் இருக்க வேண்டும். உண்மையில் ஆனந்தம் எல்லா இடத்திலும் மகிழ்ச்சியைப் பரப்புகிறது.இதயம் என்ற ஆனந்த ஊற்றை, இடையறாத தியானம்,நாமஸ்மரணை மற்றும் இறைவனது புகழ்,அருள் மற்றும் தோற்றங்களை அவ்வப்போது நினைவு கூர்வது போன்றவற்றால், (ஸ்மரணம்,சேதனம்,மனனம்) செருவூட்ட வேண்டும். சந்தேகத்திற்கும், சோர்வுக்கும் இடம் அளிக்காது, பின்னோக்கிப் பாராது லக்ஷியத்தை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். இறைவனிடம் பக்தி கொண்டவர் தோல்வியை அறியார். இறை நாமத்தை உளமார்ந்து ஏற்றுக் கொள்வது அனைத்துத் தடைகளையும் முறித்து விடும். அனைத்தையும் காப்பவன் உங்கள் பக்கம் இருக்கும் போது, நீங்கள் காப்பாற்றப் படுவீர்களா என்ற ஐயம் எதற்கு?