azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 07 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 07 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Remember that contentment will not make one an idler. It is an attribute of true pure (Sathwic) character. It will make the mind turn always towards the Lord. It will save you from the tribulations one goes through to satisfy unimportant wants and to cater to selfish needs. It will direct human talents towards efforts that elevate. The contented person will also be truthful and will therefore be in constant communion with the Atma. That is to say, such a person can be immersed in meditation for long periods without rest or feeling fatigued. Contentment is the royal road to meditation. ( Geetha Vahini, Ch 1)
மனத்திருப்தி என்பது ஒருவரை சோம்பேரியாக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது தூய்மையான சாத்வீக குணத்தின் லக்ஷணமாகும். அது மனதை எப்போதும் இறைவனை நோக்கியே திரும்ப வைக்கும். முக்கியமில்லாத ஆசைகளைப் பூர்த்தி செய்வதாலும்,சுய நலமான தேவைகளுக்குத் தீனி போடுவதாலும் ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய தடுமாற்றங்களிலிருந்து காப்பாற்றும். அது மனிதத் திறமைகளை அவர்களை உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபட வைக்கும். திருப்தியாக உள்ள மனிதர் சத்திய சீலராக இருப்பதால் எப்போதும் ஆத்மாவுடன் இணைந்தவராக இருப்பார். அதாவது, இப்படிப்பட்ட மனிதர் நீண்ட நேரம் ஓய்வின்றி, களைப்படையாது தியானத்தில் திளைத்திருப்பார். திருப்தியே தியானத்திற்கான ராஜ பாதை.