azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Joy and grief are as day and night; they have to be put up with and gone through. They will neither appear nor disappear at your will! Both are related to the physical or the material - the body; they do not affect the soul. You are liberated the moment you transcend joy and grief. What is there to grieve in life? Did you grieve when your body underwent changes? The child disappears in the boy, the boy in the youth, the youth is lost in the middle-aged man who in turn is lost in the old man. You never weep over these changes that affect the body; why then, when the body is lost in death? Whatever changes your body may suffer, the Atma, the splendour of the true Wisdom remains immortal. Being established unshakably in this knowledge is the sign of the wise, the Jnani.( Geetha Vahini, Ch 1)
இன்ப துன்பங்கள், பகல்,இரவு போன்றவை; அவற்றை சகித்துக் கொண்டு அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தோன்றவோ மறையவோ செய்யாது ! இவை இரண்டுமே உடல் சம்பந்தப் பட்டவை ; அவை ஆத்மாவை பாதிப்பதில்லை. இன்ப துன்பங்களைக் கடந்த அடுத்த கணமே நீங்கள் விடுதலை அடைகிறீர்கள். வாழ்வில் சோகம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? உங்கள் உடல் பல மாற்றங்களை அனுபவித்தபோது துயரம் கொண்டீர்களா? குழந்தை,சிறுவனிலும்,சிறுவன் இளைஞனிலும்,இளைஞன் நடுத்தர வயதானவனிலும், பிறகு அவனே வயோதிகனிலும் மறைந்து விடுகிறார்கள். இந்த உடலைப் பாதிக்கும் மாற்றங்களின் போது நீங்கள் ஒருபோதும் அழுவதில்லை; பிறகு இந்த உடல் இறப்பில் மறையும்போது ஏன் அழ வேண்டும் ? உடல் எந்தவிதமான மாற்றங்களால் பாதிக்கப் பட்டாலும்,உண்மையான ஞான ஒளியான ஆத்மா அழியாது நிலைத்திருக்கும். இந்த அறிவில் ஆணித்தரமாக நிலைத்திருப்பதே ஞானியின் லக்ஷணமாகும்.