azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 05 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 05 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

At the gates of liberation (Moksha) and Self-realisation (Sakshathkara), three guards are posted to ask you for your credentials. They are: Peace or mental equilibrium, Joy or contentment, and enquiry or discrimination (Santhi, Santhosha, and Vichara). Even if one of the guards is made friends with, the others too will facilitate your entry. First in the series is peace. If you make peace yours, contentment (Thrupthi) will automatically become yours! Contentment is the true source of joy and the most valuable of all possessions. In the absence of contentment, desire and greed attain dangerous proportions overwhelming the power of discrimination itself. Desire easily becomes greed which then degenerates into miserliness and lust. These will makes you flit from object to object in mad pursuit of the evanescent sensual joy. Hence advise your mind to flow in the direction of the Lord, instead of dragging you along the floods of objects and sensual desires. Giving up all other desires and being ever content, dwell on His name and form alone.( Dhyana Vahini, Ch 14: “Remove Defects in Character”)
மோக்ஷம் அல்லது தன்னை உணர்தல் என்ற வாசல்களில் மூன்று காவலர்கள் உங்களது தகுதியை சோதிப்பதற்காக நிறுத்தப் பட்டு இருக்கிறார்கள். அவர்களே சாந்தி( சமச்சீரான மனநிலை), சந்தோஷம்( திருப்தி) மற்றும் பகுத்தறிவு( விசாரா). இதில் ஒருவரோடாவது நீங்கள் நண்பர்களாகி விட்டால்,மற்ற இருவரும் கூட நீங்கள் உள்ளே நுழைவதற்கு உதவுவார்கள். இந்த வரிசையில் முதலாவது சாந்தி ( அமைதி). சாந்தியை உங்களுடையவர்களாக ஆக்கிக் கொண்டு விட்டால், திருப்தி என்ற சந்தோஷம் தானாகவே உங்களுடையதாகி விடும்! திருப்தி என்பது தான் உண்மையான ஆனந்தத்தின் உறைவிடம் மற்றும் அதுவே நமது சொத்துக்களில் எல்லாம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. திருப்தி இல்லாவிடில், ஆசை மற்றும் பேராசைகள் பயங்கரமான அளவிற்கு வளர்ந்து,பகுத்தறிவின் சக்தியையே வென்று விடும். ஆசைகள் எளிதாக பேராசையாக உருவாகி, அவை பின்னர் கஞ்சத்தனம் மற்றும் காம வெறி என்ற கீழ் தரமான நிலையை அடைந்து விடும். இவை உங்களை நிலையற்ற புலனின்பங்களுக்காக, ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிக்கு பேயாக அலைய வைத்து விடும். பொருட்கள் மற்றும் புலனின்பங்கள் என்ற வெள்ளத்தில் இழுக்கப் பட்டு விடாமல் இறைவனை நோக்கிச் செல்ல உங்கள் மனதிற்கு அறிவுறுத்துங்கள். மற்ற எல்லா ஆசைகளையும் விடுத்து, எப்போதும் திருப்தியுடன் அவனது நாமரூபத்தில் திளைத்திருங்கள்.