azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Meditation must be followed rigorously. In fact Dhyana (Meditation) means “discipline” and, regularity and steadiness are the essential tools for it. Lord Krishna assured, “When you start fixing your thoughts on Me, all thoughts that agitate you will be stilled through My grace.” Meditation is a first class cure for the illness of worldly existence (Bhava-roga). But along with it, also take the medicine “contentment”. Just as a traveller who has trudged along for miles in the scorching sun feels refreshed when taking bath in the waters of a cool and shady lake, so too the unfortunate individual struggling in the scorching heat of desires, feels happy and relieved when bathing in the lake of contentment. Meditate regularly and practice contentment in your mind; anyone who follows this rigorously will achieve quick results.( Dhyana Vahini, Ch 14: “Remove defects in character”)
தியானம் செய்வதை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். தியானம் என்றால் '' கட்டுப்பாடு'' எனப் பொருள். ஒழுங்காகவும் ,நிலையாகவும் செய்வது இதன் இன்றிமையாத கருவிகளாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உறுதி அளிக்கிறார்,'' எப்போது உனது எண்ணங்களை என் மீது நிலை கொள்ளத் தொடங்குகிறாயோ, அப்போதே உன்னைக் கலங்க வைக்கும் எண்ணங்கள் என் ஆசியால் செயலிழக்கும்.'' உலக வாழ்க்கை (பவ-ரோகம்) என்ற வியாதிக்கு,தியானம் ஒரு முதன்மையான மருந்தாகும். ஆனால் அதனுடன் கூடவே,'' திருப்தி'' என்ற மருந்தையும் உட்கொள்ளுங்கள். எவ்வாறு பல மைல்கள் கொளுத்தும் வெய்யிலில் நடந்து வந்த வழிப்போக்கர்,நிழல் படர்ந்த, குளிர்ந்த ஏரி நீரில் குளிப்பதன் மூலம் புத்துணர்வு பெறுகிறாரோ, அவ்வாறே ஆசைகள் என்ற வெப்பத்தில் போராடும் துரதிருஷ்டசாலியான மனிதன் திருப்தி என்ற ஏரியில் குளிக்கும்போது நிம்மதியையும், சந்தோஷத்தையும் உணர்கிறான். முறையாக தியானம் செய்து மனதில் திருப்தியை பயிலுங்கள்; எவர் ஒருவர் இதை தீவிரமாகக் கடைப் பிடிக்கிறாரோ, அவர் விரைவில் பலன் பெறுவார்.