azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 31 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 31 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

There are many snakes of wicked qualities in the anthill of your heart. When you loudly sing the Name of the Lord (Namasmarana), all the ‘snakes’ of bad qualities will come out. Namasmarana should be the very breath of your life. You must repeat God’s name in order for you to get rid of evil qualities. Today there are many who do not attach any importance to Namasmarana. It is a great mistake. In this Age of Kali only chanting of the Divine Name can redeem your lives. There is no other refuge. Singing the glory of the Lord is highly sacred. Keep your mind clear of evil thoughts as they will produce discordant notes. Only then will you become the recipient of divine grace and energy. You must sing the glory of God wholeheartedly without any inhibition. Then can you can certainly experience divine bliss. (Divine Discourse, Apr 14, 2002.)
உங்களது இதயம் என்ற புற்றில் பல கொடூர குணங்களாகிய பாம்புகள் உள்ளன. நீங்கள் உரத்த குரலில் நாமஸ்மரணை செய்யும் போது தீய குணங்களாகிய எல்லா பாம்புகளும் வெளியில் வருகின்றன. நாமஸ்மரணை என்பது உங்களது உயிர் மூச்சாக இருக்க வேண்டும். தீய குணங்களை விட்டொழிப்பதற்கு இறைவனது நாமத்தை நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்லுதல் அவசியம். இன்று பலர் நாமஸ்மரணைக்கு எந்த விதமான முக்கியத்துவமும் கொடுப்பதில்லை . இது மிகப் பெரிய தவறு. இந்தக் கலி யுகத்தில் நாமஸ்மரணை மட்டுமே நமது வாழ்வை உய்விக்க முடியும். வேறு எந்த புகலிடமும் கிடையாது.இறைவனது புகழைப் பாடுவது மிகவும் புனிதமானது. தீய எண்ணங்களை உங்கள் மனதிலிருந்து விலக்கி வையுங்கள் ஏனெனில் அவை அபஸ்வரங்களை உண்டாக்கும். பிறகு மட்டும் தான் நீங்கள் தெய்வீக கருணையையும், சக்தியையும் பெறுபவர்கள் ஆக முடியும். இறைவனது புகழை எந்த வித தயக்கமும் இன்றி உளமாரப் பாட வேண்டும், பிறகு நீங்கள் தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்க இயலும்.