azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

You must take up the study of scriptures in an attitude of submission and expectancy. Every chapter in the Bhagavad Geetha lays down the means and methods of reaching the goal of peace and harmony, with emphasis on spiritual attitude and practices in life. The Geeta is a boat which takes man across from the self-imposed state of bondage to the freedom which is one’s nature, from darkness to light. The Geetha encourages the aspirant to aspire, not despair. One must persevere, not clamour for quick success. Truly speaking, every being has come into this field of activity (Karmakshetra) only to engage themselves in activity, not in order to earn the fruit of such activity. That is the fundamental lesson taught by the Geetha.
புனித நூல்களைப் படிப்பதை பணிவுடனும்,எதிர்பார்ப்புடனும் செய்தல் வேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் வாழ்க்கைக்கான ஆன்மீக மனப்பாங்கு மற்றும் பயிற்சிகளை வலியுறுத்தி அமைதியையும் இசைவையும் அடைவதற்கான வழிகளையும் முறைகளையும் வகுத்துக் கொடுக்கிறது. இருளிலிருந்து ஒளிக்குச் செல்வதைப் போல், மனிதனை, தானே ஏற்படுத்திக் கொண்டுள்ள பிணைப்புகளிலிருந்து தனது உண்மையான இயல்பான சுதந்திரத்திற்கு இட்டுச் செல்லும் படகைப் போன்றது ஸ்ரீமத் பகவத் கீதை. கீதை சாதகருக்கு நம்பிக்கை ஊட்டுகிறதே அன்றி மனம் தளரச் செய்வதில்லை. ஒருவர் விரைவாக வெற்றி வேண்டும் என விரும்பாது பொறுமை காத்தல் வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்,ஒவ்வொரு ஜீவனும், இந்தக் கர்மக்ஷேத்திரத்தில் (வாழ்க்கை) செயலாற்ற வந்திருக்கிறதே அன்றி அந்தச் செயல்களின் பலனை ஈட்டுவதற்காக அல்ல. இதுவே ஸ்ரீமத் பகவத் கீதை புகட்டும் அடிப்படைப் பாடம்.