azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Individuals full of ego love to exercise authority over others. They see everything through glasses coloured by the smoke of selfishness and self-love. “My words are true.” “My opinion is correct.” “My deeds are right.” Such behaviour is very harmful for spiritual aspirants. Aspirants must look forward eagerly to any objective criticism, or suggestion, or advice, from whatever quarter. Also, aspirants must minimise all discussion and argumentation as this breeds a spirit of rivalry and leads one on to angry reprisals and vengeful fighting. Do not struggle to earn the esteem of the world. Do not feel humiliated or angry when the world does not recognise you or your merits. Learn this first and foremost if you are an aspirant for spiritual success. Do not become happy when you are being praised; therein lies a deadly trap, which might even lead you astray and endanger your progress. (Dhyana Vahini, Ch 14: “Remove Defects in Character”.)
அஹங்காரம் நிறைந்த மனிதர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள். அவர்கள் அனைத்தையும் சுய நலம் மற்றும் சுய நேசம் என்ற புகை படிந்த கண்ணாடிகள் மூலம் பார்க்கிறார்கள். '' என்னுடைய வாரத்தைகள் தான் உண்மை'', '' என்னுடைய கருத்துத் தான் சரியானது'' '' என்னுடைய செயல்கள் தான் சரியானவை '' இப்படிப்பட்ட நடத்தை ஆன்மீக சாதகர்களுக்கு மிகவும் தீமையானவை. சாதகர்கள் எவரிடமிருந்து வந்தாலும், நடுநிலையான விமரிசனத்தையோ, கருத்தையோ, அல்லது அறிவுரையையோ ஆர்வத்துடன் எதிர்பார்க்க வேண்டும். மேலும்,சாதகர்கள் கலந்துரையாடல் மற்றும் வாக்குவாதம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் இவை போட்டி மனப் பாங்கை உருவாக்கி,கோபம் நிறைந்த எதிர்ப்பு மற்றும் பழிவாங்கும் சண்டைகள் ஆகியவற்றிற்கு ஒருவரை கொண்டு விட்டு விடுகின்றன. உலகில் புகழ் அடைவதற்காக போராடாதீர்கள். உங்களது பெருமைகளை உலகம் புரிந்து கொள்ளாத போது கோபம் அடையவோ, தாழ்மையாக உணரவோ வேண்டாம். நீங்கள் ஆன்மீக வெற்றிக்காக ஏங்கும் சாதகர்களானால்,இதை முதலில் முக்கியமாக கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் புகழப்படும் போது மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்; அதில் தான் உங்களை நிலை தடுமாறச் செய்து, உங்களது முன்னேற்றத்தையே பாதித்து விடும் ஒரு பயங்கரமான வலைப் பொறி உள்ளது.