azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 26 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 26 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The Deepavali festival teaches a profound spiritual truth. On this day an entire array of lamps is lit just by the flame from one lamp. This act signifies that it is the One that has willed to become the Many. That one lamp symbolises the Supreme Effulgent Lord. The others symbolise the light of the individual selves. As long as the demonic qualities remain in man, he will be immersed in darkness. Deepavali has to be observed as a day for getting rid of all the bad qualities in us, symbolised by the demon Narakasura. The destruction of Narakasura symbolises the destruction of evil and the restoration of what is good. This is the inner significance of the festival. (Divine Discourse, Nov 9, 1988)
- BABA
தீபாவளிப் பண்டிகை ஒரு ஆழ்ந்த ஆன்மீக உண்மையை கற்பிக்கிறது.இந்த நாளில், அனைத்து வரிசையான தீபங்களும்,ஒரே தீபத்தின் சுடரால் ஏற்றப் படுகின்றன. இந்தச் செயல்,அந்த ஒன்றுதான் பலவாக உருவெடுக்கச் சங்கல்பித்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அந்த ஒரு தீபம் மிக உயர்ந்த ஒளி மயமான இறைவனை குறிக்கிறது.மற்றவை தனிப் பட்ட ஜீவ ராசிகளைக் குறிக்கின்றன. அசுர குணங்கள் மனிதனுள் இருக்கும் வரை அவன் இருளில் தான் ஆழ்ந்திருப்பான். நரகாசுரன் என்ற அசுரனைப் போல நம்முள் இருக்கும் தீய குணங்களைக் களையும் நாளாக தீபாவளியைக் கொண்டாட வேண்டும். நரகாசுரனின் அழிவு என்பது தீயவை அழிக்கப் பட்டு , நல்லவை நிலை நாட்டப் படுவதைக் குறிக்கிறது. இதுவே இந்தப் பண்டிகையின் உட்கருத்தாகும்.
- பாபா