azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 23 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 23 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

“Allaho Akbar; La Illah Ill Allah.” This sacred formula signifies that God is the supreme sovereign; He is the undisputed, unexcelled Ruler of the Creation. He alone is worthy of worship. In the Bhagavad Gita, Lord Krishna says, “There is nothing higher than Me.” The Koran formula says the same. Thus Islam and Hinduism convey the same message. The Holy Koran advises the followers of God to acquire self-confidence and place all burdens on God. One must have implicit faith in the power of God and recognise it every moment to lead a meaningful life. To evidence rectitude in the Durbar (palace) of the Lord, when the end is near, one must follow the straight path laid down by the Lord until the very end. The Holy Koran is the guide till the end. It has to be revered and observed down to the very letter. This is the spiritual instruction observed by the followers of Islam. ( From Sathya Sai Vahini Chapter 23)
- BABA
'' அல்லாஹோ அக்பர்; லா இலாஹி இல்லல்லா'' . இந்தப் புனித வாக்கு இறைவன் மிக உயர்ந்தவன்; இந்தப் படைப்பின் மறுக்க முடியாத, தலை சிறந்த தலைவன் என்பதைக் குறிக்கிறது. அவன் ஒருவனே வணங்கத் தக்கவன். ஸ்ரீமத் பகவத்கீதையில், ஸ்ரீகிருஷ்ணர்,'' என்னை விட உயர்ந்தது எதுவுமில்லை '' என்கிறார்.புனித குரானும் இந்தக் கருத்தையே கூறுகிறது. புனித குரான், இறைவனைப் பின் பற்றுபவர்களை தன்னம்பிக்கையுடன்,எல்லாச் சுமைகளையும் இறைவன் பால் அளித்து விடுமாறு அறிவுறுத்துகிறது. ஒருவர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் எனில், இறைவனது சக்தியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, அதனை ஒவ்வொரு கணமும் உணர்தல் வேண்டும். இறுதி நேரம் அருகில் வரும் போது இறைவனது அரச சபையில் நீதியைக் காண வேண்டும் என்றால், இறைவனால் வகுத்தளிக்கப் பட்ட நேர் வழியை இறுதி வரைக் கடைப் பிடிக்க வேண்டும். அதனைப் போற்றி, அதனிலிருந்து பிறழாது பின்பற்ற வேண்டும். இஸ்லாமைப் பின் பற்றுபவர்கள் கடைப் பிடிக்கும் ஆன்மீகக் கோட்பாடு இதுவே. (ஆதாரம்; சத்ய சாய் வாஹினி 23ம் பகுதி)
- பாபா