azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

You will attain quick progress in the spiritual path if you overcome the difficult obstacles, viz. anger, pride, conceit, the tendency to discover the faults of others, etc. These operate subconsciously, as the currents in the depths of the ocean. You must be vigilant not to lose your temper on even small things, for that will hinder your progress. Cultivate love and humility towards all. Then, undesirable habits will fall away from you, since anger is the parent of all wrong behaviour. Anger can turn any person into bad ways, any moment, and in any form. So, sublimate it first by systematic effort. Welcome gladly anyone who points out your defects; indeed, be grateful to them. Never entertain hatred against them, for that is as bad as hating the “good”. You must love the “good” and discard the “bad”. Remember, the “bad” should not be hated. It has to be given up, avoided.
- BABA
கோபம்,செருக்கு,இறுமாப்பு,பிறரிடம் குறை காணும் மனப்பாங்கு போன்ற கடினமான தடைகளைத் தாண்டி விட்டீர்கள் என்றால், ஆன்மீக மார்க்கத்தில் நீங்கள் விரைவாக முன்னேற்றம் அடைவீர்கள். கடலின் ஆழத்தில் உள்ள நீரோட்டங்களைப் போல இவை உள்மனதில் வேலை செய்கின்றன. சின்னச் சின்ன விஷயங்களில் கூட கோபம் அடையாமல் இருப்பதில் நீங்கள் கவனமாக இருத்தல் வேண்டும்,ஏனெனில் அது உங்களது ஆன்மீக முன்னேற்றத்தைத் தடை செய்யும். எல்லோரிடமும் அன்பையும், பணிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பின்னர், விரும்பத்தகாத பழக்கங்கள் உங்களிடமிருந்து விலகி விடும்,ஏனென்றால் கோபம் தான் அனைத்துத் தவறான நடவடிக்கைகளுக்கும் தந்தை போன்றது. கோபம் எவரையும் எந்தத் தருணத்திலும் , எந்த விதத்திலும் தீய வழிகளில் திருப்பி விடும். எனவே , முறையான முயற்சியால் அதனை முதலில் பண்படுத்துங்கள். உங்களது குறைகளைச் சுட்டிக்காட்டும் எவரையும் வரவேற்று, உண்மையில் அவர்களுக்கு நன்றி கூறுங்கள். ஒருபோதும் அவர்கள் மீது வெறுப்பு கொள்ளாதீர்கள், ஏனென்றால் அது,நல்லவர்களை வெறுப்பது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறானதாகும். நீங்கள் '' நல்லவற்றை'' நேசித்து, '' தீயவற்றை'' விலக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள்,'' தீயவற்றை '' வெறுத்தல் கூடாது. அவற்றைத் தவிர்க்க வேண்டும் ,விட்டு விட வேண்டும்.
- பாபா