azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 21 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 21 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The udder of the cow has milk in it. The milk has ghee (clarified butter) in it. But the ghee cannot be a source of strength to one, as such. The milk has to be drawn, yeast added to curdle it, butter has to be churned out and clarified to produce the ghee which, when consumed by one can give one strength. So too, though God is omnipresent, He has to be discovered and cognised in order to realise the bliss. Like oil in mustard, butter in yoghurt, like water inside the earth, like fire in timber, God is present but not patent in everything. God is in the human body and in the human mind. To become aware of Him there, spiritual effort is necessary. When that is undertaken, union with the Supreme within can be realised.
- BABA
பசுவின் மடியில் பால் உள்ளது. பாலில் நெய் இருக்கிறது. ஆனால்,அப்படி நெய் இருக்கிறது என்பது மட்டும் ஒருவருக்கு சக்தி அளித்து விடாது. பாலைக் கறந்து, அதைக் காய்ச்சி உறையச் செய்து,அதிலிருந்து வெண்ணையைக் கடைந்து எடுத்து, அதைக் காய்ச்சி நெய்யை எடுத்து உண்டால் தான் ஒருவருக்கு சக்தி கிடைக்கும். அது போலவே , இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அவனைக் கண்டறிந்து உணர்ந்தால் தான் பேரானந்தத்தை அனுபவிக்க முடியும். எள்ளில் எண்ணையாக,தயிரில் வெண்ணையாக, நிலத்தினுள் நீராக, மரத்தினுள் தீ£யாக, ஒவ்வொன்றிலும் கண்ணுக்குப் புலப்படாமல் இறைவன் இருக்கிறான். இறைவன் மனித உடலிலும்,உள்ளத்திலும் உறைகிறான். அவனை அங்கு காண வேண்டுமென்றால்,ஆன்மீக முயற்சி அவசியம். அதைச் செய்யும்போது பரமாத்மாவுடன் ஒன்று கலப்பதை நம்முள்ளேயே உணர இயலும்.
- பாபா