azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 20 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 20 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The game of life is a cosmic play that God is enacting. The actors and actresses, the dialogues, the cues and the songs have all been assembled by Him. He is the cast, the director, and the audience. It is God who manifests Himself and manipulates every being. In the epic Mahabharatha, He filled one side with boundless material strength urged on by unrighteous greed, and the other with apparently limited strength of the Atman, the ever-righteous. In the cosmic confrontation and conflict between these two, the Lord stood forth as the arbiter who brought about the victory of right over might. The core lesson we derive is contained in the Gita—the seeker surrendering, with the words, “Karishye vachanam thava” (Your word shall be obeyed) and the Lord admonishing the seeker, “Swadharme nidhanam sreyah” (In fulfilling the duty assigned to you lies your safety and prosperity.) All work one does every day should be tested on this criterion.
- BABA
வாழ்க்கை என்ற விளையாட்டு, இறைவன் நடத்துகின்ற அண்டசராசரங்களின் நாடகமே. நடிகர்கள், நடிகைகள், வசனங்கள், நினைவூட்டுக் குறிப்புக்கள், பாடல்கள் அனைத்தும் அவனால் ஒன்று சேர்க்கப் பட்டவையே. அவனே இதன் பாத்திரங்களாகவும், இயக்குனராகவும், பார்வையாளர்களாகவும் இருக்கிறான். அந்த இறைவனே உருவெடுத்து, ஒவ்வொரு ஜீவ ராசியையும் இயக்குகிறான். மஹாபாரதம் என்ற இதிகாசத்தில்,அவனே,ஒரு பக்கத்தில் அதர்மமான பேராசையால் உந்தப் பட்டு அளவற்ற உலகியலான ஆற்றல் கொண்டோரையும், மறு பக்கத்தில் என்றும் தர்மத்தைக் கடைப் பிடிக்கும், அளவில் குறைந்ததைப் போலத் தோன்றும் ஆத்ம சக்தி உடையோரையும் நிரப்பினான். இந்த இரண்டின் மோதல் மற்றும் போராட்டத்தில் இறைவன் நடுவராக இருந்து வலிமையின் மேல் தர்மத்தின் வெற்றியை நிலை நாட்டினான். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் உட் கருத்து ஸ்ரீமத் பகவத்கீதையில் உள்ளது; அதாவது இறைவனைத் தேடுபவர் '' கரிஷ்யே வசனம் தவா '',''உனது கட்டளைகளுக்கு நான் அடிபணிகிறேன் '' என்று சரணாகதி அடைவதும், இறைவன் பக்தனுக்கு ,'' ஸ்வதர்மே நிதனம் ஸ்ரேய: '' '' ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பது தான் உனக்குப் புகழ் அளிக்கும் '' என்று வலியுறுத்துவதும் தான். ஒவ்வொரு நாளும் ஒருவர் ஆற்றுகின்ற பணி அனைத்தையும், இந்த அடிப்படையில் தான் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
- பாபா