azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Concentration, as per scriptures, is fixing the mind on one object, without any deviation. To concentrate or meditate on God one must have Sathwa-gunas (pure qualities) as the foundation. The mind should be purified by proper treatment of the character through good habits. All effort for concentration without cleansing the mind is a sheer waste of time. Many people have ruined their careers by aspiring early for concentration, without practising the discipline of good habits. Concentration alone can negate hesitation and inactivity, and grant success in any endeavour. In spirituality, taking God’s name and concentrating is essential for meditation, for that alone can ensure quick success. Even if complete faith is not forthcoming quickly, one must not give up or change, for practice will certainly yield victory. Meditation is the spiritual strength that will keep off the disease of Samsara (worldliness).
- BABA
நமது ஆன்மீக நூல்களின் படி, தியானம் என்பது, மனதை ஒரே பொருளின் மீது அதிலிருந்து எந்த ஒரு திருப்பமும் இன்றி நிலை கொள்ள வைப்பது தான்.இறைவன் மீது தியானம் செய்வதற்கு ஒருவர் ஸத்வகுணங்களை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும். நற் பழக்கங்களால் முறையாகப் பண்படுத்தப் பட்ட குணநலன்களின் மூலம் மனதைத் தூய்மையாக்க வேண்டும். மனதைத் தூய்மைப் படுத்தாமல்,தியானம் செய்வதற்கான முயற்சிகள் அனைத்தும் காலத்தை வீணடிப்பவையே. நற்பழக்கங்கள் என்ற கட்டுப் பாட்டைப் பின்பற்றாது, விரைவாக தியானம் செய்ய முற்பட்டோர் பலர் தமது வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டுள்ளார்கள். முனைப்பு மட்டுமே சோம்பலையும், தயக்கத்தையும் முறியடித்து, எந்த முயற்சியிலும் வெற்றி அளிக்கும். ஆன்மீகத்தில் , இறைநாமத்தை எடுத்துக் கொண்டு, அதில் முனைப்பைச் செலுத்துவது, தியானத்தில் விரைவாக வெற்றி காண்பதற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். முழு நம்பிக்கை உடனே வராவிட்டாலும், ஒருவர் விடாது மாற்றமின்றி முயற்சித்தால்,அந்தப் பயிற்சி வெற்றியைத் தரும். தியானம், ஸம்ஸாரம் என்ற நோயைத் தவிர்ப்பதற்கான ஆன்மீக வல்லமையாகும்.
- பாபா