azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

No man can take the wealth of the world with him when he dies. This is a fact we have observed throughout the history of mankind. Many great kings, emperors, saints and seers have left without taking anything. When you are born you don't bring anything with you. In order to lead a fruitful and meaningful life, render service to mankind, which will take you nearer to God. Life is like a football game. In the game, six players on either side go on kicking the ball till it is sent in to the goalpost. The six bad qualities - lust, anger, greed, desire, pride, and jealousy are on one side and the good qualities - truth, right conduct, peace, love, non-violence, and sacrifice are on the other side. The game is between these two teams. You must play the game with the goal that having been born as a human, you should not be born again.
- BABA
எந்த ஒரு மனிதனும் தான் இறக்கும் போது, இந்த உலகத்தின் சொத்துக்களை தன்னுடன் எடுத்துச் செல்ல இயலாது. மனித சமுதாயத்தின் சரித்திரம் முழுவதிலும் நாம் இதைப் பார்க்கிறோம். மிக உயர்ந்த அரசர்கள், சக்கிரவர்த்திகள், முனிவர்கள், சாதுக்கள் போன்றவர்கள் எதையும் எடுத்துக் கொள்ளாமல் தான் சென்றிருக்கிறார்கள். நீங்கள் பிறக்கும் போது எதையும் உங்களுடன் கொண்டு வருவதில்லை. பயனும், அர்த்தமும் உள்ள வாழ்க்கை வாழ்வதற்கு, நீங்கள் மனித குலத்திற்கு சேவை செய்யுங்கள்; அது உங்களை இறைவன் பால் கொண்டு செல்லும். வாழ்க்கை ஒரு கால்பந்தாட்டம் போன்றது. இந்த விளையாட்டில்,ஒவ்வொரு தரப்பிலும் ஆறு விளையாட்டு வீரர்கள், பந்து கோல் இலக்கை அடையும் வரை உதைத்துக் கொண்டிருப்பார்கள் .தீய குணங்களான காமம், கோபம், பேராசை, மோகம், இறுமாப்பு மற்றும் பொறாமை என்பவை ஒரு தரப்பிலும், நற்குணங்களான ஸத்யம்,தர்மம்,சாந்தி, ப்ரேமை,அஹிம்சை மற்றும் தியாகம் மற்றொரு தரப்பிலும் உள்ளன. விளையாட்டு இந்த இரண்டு அணிகளுக்குள் தான். நீங்கள் இந்த விளையாட்டை, மனிதனாகப் பிறந்து விட்ட பிறகு, மறுபடியும் பிறக்கக் கூடாது என்ற குறிக்கோளுடன் ஆட வேண்டும்.
- பாபா