azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

You have to see the One in many, or unity in diversity. This is the correct thing to do. That is to say: Help Ever, Hurt Never, perceiving Atma (Divine Self) in all. If you are not able to do any help, at least do no harm. See Divinity in all and perform sacred activities. Don't waste the elements or misuse them. Being bound to the world with attachment to worldly objects is the negative approach. Take the positive approach: turning towards Divinity. The difference lies only in turning your mind. Turn it to the world, you get bound; turn to God, you get liberated. God is without birth and death and is an eternal witness; you must strive hard to earn the love of God. One who receives the love of God will be earning the love of all. If you realise that love is God, you will not get attached to worldly things.
- BABA
பலவாகக் காணப்படுவற்றில் உறையும் ஒன்றை அதாவது வேற்றுமையில் உள்ள ஒற்றுமையை,நீங்கள் உணர வேண்டும். இதுவே செய்ய வேண்டிய சரியான ஒன்று. அதாவது, தெய்வீக ஆத்மாவே அனைவருள்ளும் உள்ளது என்பதைக் உணர்ந்து எப்போதும் உதவி செய்தல் வேண்டும்;ஒருபோதும் தீங்கிழைக்கக் கூடாது. உங்களால் எந்த உதவியும் செய்ய இயலவில்லை என்றால்,குறைந்த பட்சம் தீங்கிழைக்காது இருக்க வேண்டும். அனைவருள்ளும் தெய்வீகத்தைக் கண்டு, புனிதமான செயல்களைச் செய்யுங்கள். பஞ்ச பூதங்களை வீணடிக்கவோ, தவறாகப் பயன்படுத்தவோ கூடாது. உலகில் உள்ள பொருட்களில் பற்றுதல் கொண்டு,இந்த உலகோடு பிணைந்திருப்பது, எதிர்மறையான முறையாகும். தெய்வீகத்தை நோக்கித் திரும்பும் நேர்வழியைப் பின்பற்றுங்கள். உங்கள் மனதைத் திருப்பவதில் தான் வித்தியாசம் உள்ளது. அதை உலகை நோக்கித் திருப்புங்கள்,பிணைக்கப் படுகிறீர்கள்; இறைவனை நோக்கித் திருப்புங்கள், விடுதலை அடைகிறீர்கள். பிறப்பு,இறப்பு அற்று எப்போதும் சாக்ஷிபூதமாக இருப்பவன் இறைவன்;நீங்கள் அவனது அன்பைப் பெற கடும் முயற்சி எடுக்க வேண்டும். இறைவனது அன்பைப் பெறுபவர் அனைவரது அன்பையும் பெறுவர். அன்பே இறைவன் என்பதை உணர்ந்து விட்டீர்களானால், உலகிலுள்ள பொருட்களில் பற்று வைக்க மாட்டீர்கள்.
- பாபா