azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 13 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 13 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

We refer to humanity as mankind. Does this not imply that as a human you should radiate kindness? ‘Sath’ means God. You should have the company of God or proximity to God. ‘Chith’ is awareness. The combination of Sath and Chith gives Ananda (Divine bliss). Sath is sugar and Chith is water. If you mix them, the names of sugar and water go away and you get syrup. Sath is Shivam and Chith is Parvathi. So, the combination is Ardhanareeshwara (The form of Lord Shiva, where the Lord is half male and half female). Every one of us has the divine principle of Ardhanareeshwara within us. Fill up your tank of heart with love. Then it will flow through the taps of all sense organs and also the five Pranas (vital airs). This is the way to attain joy.
- BABA
ஆங்கிலத்தில் மனித குலத்தை '' mankind'' என்று குறிப்பிடுகிறோம். இதிலிருந்தே மனிதராகிய நீங்கள் கனிந்த உள்ளமுடையவராகத் (kind) திகழ வேண்டும் என்பது புரியவில்லையா? '' ஸத் '' என்றால் இறைவன். நீங்கள் இறைவனுடன், அவனது அருகாமையில் இருக்க வேண்டும். '' சித் '' என்றால் உணர்வுநிலை. '' ஸத் ''தும், '' சித் '' தும் இணைவது பேரானந்தத்தை அளிக்கிறது. '' ஸத் '' என்பது சக்கரை, '' சித் '' என்பது தண்ணீர். நீங்கள் இரண்டையும் கலந்தால்,தண்ணீர்,சக்கரை என்ற இரண்டு பெயர்களும் மறைந்து, இனிப்புக் கரைசல் உங்களுக்குக் கிடைக்கிறது. '' ஸத் '' என்பது சிவம்,'' சித்'' என்பது பார்வதி. எனவே இரண்டும் இணைந்தால், '' அர்த்தநாரீஸ்வரர்''.( சிவனது இறை உருவமான பாதி ஆண், பாதி பெண்). நாம் ஒவ்வொருவரும் தெய்வீகமான '' அர்த்தநாரீஸ்வரர்'' தத்துவத்தை உள்ளே உடையவர்கள். உங்கள் இதயம் என்னும் தொட்டியை அன்பால் நிரப்புங்கள். பிறகு புலனுறுப்புக்கள் என்ற குழாய்கள் மற்றும் பஞ்ச பிராணன்கள் வழியாக அது பெருக்கெடுத்து ஓடும் . இதுவே ஆனந்தம் பெறுவதற்கான வழி.
- பாபா