azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

God is within you in the form of conscience. Follow the conscience. Some do not do so because of bodily attachment. You are endowed with the precious gift of body with the sense organs and limbs in order to discharge your duties in the world. You have only to do Sathkarma (good deeds). You should always do things that are acceptable to God. Just as the same electric current passes through all electric gadgets of various types and sizes, so also Atma (Divine Self) is common in all beings. Stars are many, sky is one; cows are of many colours, milk is white; jewels are many, gold is one; beings are many, breath is one; countries are many, earth is one. Therefore, comprehend the One in many, the unity in diversity.
- BABA
இறைவன் உங்களுள் மனச்சாட்சியின் வடிவில் இருக்கிறான்.உங்கள் மனச்சாட்சியைப் பின்பற்றுங்கள். சிலர் உடல் மீது கொண்ட பற்றால் அவ்வாறு செய்வதில்லை. உலகில் கடமைகளை ஆற்றுவதற்காக, புலனுறுப்புக்களும், அவயவங்களும் கொண்ட விலைமதிப்பற்ற பரிசான இந்த உடலை நீங்கள் பெற்றுள்ளீர்கள். நீங்கள் நற்பணிகளை மட்டுமே செய்தல் வேண்டும். இறைவனால் ஏற்றுக் கொள்ளத் தக்க செயல்களையே செய்ய வேண்டும். எப்படி ஒரே மின்சாரம் தான், பல விதமான,பல வடிவம் கொண்ட மின்சாரக் கருவிகளுக்குள் பாய்கிறதோ, அதே போல,அனைத்து உயிர்களுக்கும் ஆத்மா பொதுவானது.நக்ஷத்திரங்கள் பல,ஆகாயம் ஒன்றே. பசுக்கள் பல வண்ணங்களில் இருந்தாலும் பால் வெண்மையே.ஆபரணங்கள் பலவானாலும், தங்கம் ஒன்றே. உயிரினங்கள் பலவானாலும் உயிர் மூச்சு ஒன்றே. நாடுகள் பலவானாலும்,நானிலம் ஒன்றே. எனவே,பலவற்றிலும் உறையும் அந்த ஒன்றை, வேற்றுமையில் ஒற்றுமையைப் புரிந்து கொள்ளுங்கள் .
- பாபா