azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 10 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 10 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Follow your conscience. God is in your heart. Wherever you go and whatever you do, God knows it, even if you think none has noticed it. People start worrying about petty temporary things that are like passing clouds and sometimes falter in faith and devotion. This is not correct. You should never give up devotion. Your good work will beget God's grace without fail. Sin or merit comes only from your own deeds, not from outside. Spend your time thinking of God and chanting His name. You will never come to grief. Follow the dictum, "Sathyam vada, Dharmam chara” (speak the truth, practice righteousness). You are bound to have success always. Truth is common to all countries and all times. If you follow truth, which is God, you will invariably do only righteous work. Divine love will flow to you and ensure you are always doing sacred work.
- BABA
உங்கள் மனச்சாட்சியைப் பின்பற்றுங்கள். இறைவன் உங்கள் இதயத்தில் இருக்கிறான். நீங்கள் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும்,எவருமே கவனிக்கவில்லை என்று நீங்கள் நினைத்தாலும் கூட,இறைவன் அதை அறிவான். கலைந்து விடும் மேகங்கள் போன்ற,நிலையற்ற சிறு சிறு விஷயங்களுக்காக மனிதர்கள் கவலையில் ஆழ்ந்து, சில சமயங்களில் தங்களது நம்பிக்கை மற்றும் பக்தியில் தடுமாறி விடுகின்றனர். இது சரியல்ல. நீங்கள் ஒரு போதும் பக்தியை கைவிட்டு விடக் கூடாது. உங்களது நற்செயல்கள், இறைவனது கருணையை தவறாது பெற்றுத் தரும். பாவ புண்ணியங்கள் உங்களது செயல்களால் வருவதே அன்றி வெளியிலிருந்து வருவதல்ல. உங்களது நேரத்தை இறைவனை தியானிப்பதிலும்,நாமஸ்மரணையிலும் செலவிடுங்கள். நீங்கள் ஒரு போதும் துக்கத்திற்கு ஆளாக மாட்டீர்கள். '' ஸத்யம் வத, தர்மம் சர'' அதாவது '' உண்மையே பேசு, தர்மத்தின் வழி நட '' என்ற கோட்பாட்டைக் கடைப் பிடியுங்கள். எக்காலத்திலும் நீங்கள் வெற்றி காண்பீர்கள். ஸத்யம் என்பது எல்லா நாடுகளுக்கும்,எல்லாக் காலங்களுக்கும் பொதுவானது. இறைவனாகிய ஸத்யத்தைக் கடைப்பிடித்தால்,நீங்கள் தவறாமல் தர்ம காரியங்களைத் தான் செய்வீர்கள். தெய்வீக அன்பு உங்களுள் ஊற்றெடுத்து, நீங்கள் எப்போதும் புனிதப் பணி ஆற்றுவதை உறுதி செய்யும்.
- பாபா