azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

All of you are embodiments of divinity. Your forms are divine. You and God are one. You are not different from God. Experience this unity. This unity is Truth. Unity is divinity. God is not separate from you. God is manifest in you. Unfortunately, you are forgetting this truth. If you forget your own nature, it amounts to forgetting everything else. Never forget your reality. Without forgetting that reality, meditate on it. Always remember this fact: “Wherever I am, I am always divine”. Hold on to this firm belief, steadfastly. Never give up this faith and your love for God under any circumstances. Never allow this faith to be disturbed by worldly objects. Keep your love secure. If you thus meditate on your innate divinity, you will realise your unity with divinity. In fact, that unity is Divinity.
- BABA
நீங்கள் அனைவரும் தெய்வீகத்தின் ஸ்வரூபங்களே. உங்கள் உருவங்கள் தெய்வீகமானவையே. நீங்களும் இறைவனும் ஒன்றே. நீங்கள் இறைவனிடமிருந்து மாறுபட்டவர்கள் அல்ல. இந்த ஒற்றுமையை உணருங்கள். இந்த ஒற்றுமையே சத்தியம். ஒற்றுமையே தெய்வீகம். இறைவன் உங்களிலிருந்து தனிப்பட்டவன் அல்ல. இறைவன் உங்களில் தோற்றமளிக்கிறான். துரதிருஷ்ட வசமாக,நீங்கள் இந்த சத்தியத்தை மறந்து விட்டீர்கள். உங்களது நிலையையே, நீங்கள் மறந்து விட்டால், அது அனைத்தையும் மறந்து விட்டதற்கு சமம். ஒரு போதும், உங்களது உண்மை நிலையை மறக்காதீர்கள். அந்த உண்மை நிலையை மறவாது, அதன் மீது தியானம் செய்யுங்கள். '' நான் எங்கிருந்தாலும், தெய்வீகமானவனே '' என்ற உண்மையை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இந்த உறுதியான நம்பிக்கையை தடுமாற்றமின்றி பற்றிக் கொள்ளுங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் இந்த நம்பிக்கையையும், இறைவன் பால் அன்பையும், ஒருபோதும் விட்டு விடாதீர்கள். ஒரு போதும் உலக விஷயங்களால் இந்த நம்பிக்கை குலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் அன்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இவ்வாறு உங்களது உள்ளார்ந்த தெய்வீகத்தின் மீது தியானம் செய்து வந்தால், தெய்வீகத்துடன் உங்களுக்கு உள்ள ஒற்றுமையை உணர்வீர்கள். உண்மையில் இந்த ஒற்றுமையே தெய்வீகம்.
- பாபா