azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Love is the most important factor in life. If you pray to God with intense love and devotion, your prayers will certainly be answered. Such is the power of love. Devoid of love, nothing can be achieved even in this mundane world. Love is God, live in love! The whole world becomes a vacuum without love. That Love alone assumes a form. Realise this truth. There is no power greater than humanness in this world. In God’s creation, everything is reaction, reflection and resound. All that we experience in the outside world is only a reaction, reflection and resound of the inner being. Let the flame of your love be steady, not flickering. There is no greater Sadhana (spiritual practice) than love. That is the spiritual practice you have to adopt at all times. Divinity is omnipresent. Cultivate Divine Love so that you can realize the omnipresent divinity within your own self.
- BABA
அன்பு ,வாழ்வின் மிக முக்கியமான அம்சமாகும். நீங்கள் இறைவனிடம் ஆழ்ந்த அன்பு மற்றும் பக்தியுடனும் பிரார்த்தித்தால்,உங்களது அனைத்து பிரார்த்தனைகளுக்கும் விடை கிடைக்கும். அன்பின் சக்தி அப்படிப்பட்டது. அன்பின்றி, இந்த உலகியல் வாழ்க்கையில் கூட எதையும் சாதிக்க இயலாது. அன்பே இறைவன்,அன்பில் வாழுங்கள் ! அன்பில்லையெனில் உலகனைத்தும் சூன்யமாகிவிடும்.அந்த அன்பு மட்டுமே ஒரு உருவத்தை ஏற்று வருகிறது. இந்த உண்மையை உணருங்கள். மனிதநேயத்தை விட சக்தி படைத்தது இந்த உலகில் எதுவுமில்லை.இறைவனது படைப்பில் அனைத்தும் பிரதிச்செயல், பிரதிபலிப்பு மற்றும் பிரதித்வனியே. வெளி உலகில் நாம் அனுபவிக்கும் அனைத்தும் உள்ளுணர்வின் பிரதிச்செயல், பிரதிபலிப்பு மற்றும் பிரதித்வனிகளே. உங்களது அன்பின் சுடர் ஊசலாடாது நிலையாக இருக்கட்டும். அன்பை விட மேன்மையான சாதனை எதுவுமில்லை. எல்லாக் காலங்களிலும் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீகப் பயிற்சி அதுதான். தெய்வீகம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. தெய்வீக அன்பை வளர்த்துக் கொள்வதன் மூலம், எங்கும் நிறைந்துள்ள இறைவனை உங்களுள்ளேயே உணருங்கள்.
- பாபா