azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 07 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 07 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The term “Devi” represents the Divine power that has taken the Rajasic (powerful) form to suppress the forces of evil and protect the Sathwic (good). Whenever the forces of injustice, immorality and untruth have grown to monstrous proportions and are indulging in a death-dance, when selfishness and self-interest are rampant, when people have lost all sense of kindness and compassion, the Atmic principle, assuming the form of Shakthi, God will destroy the evil elements. This is the inner meaning of the Dasara festival. Develop good qualities. Cultivate love amongst all people. All the festivals have been designed to promote Divine love amongst everyone. It is to confer such love on the people that the Lord incarnates on earth. He Himself demonstrates how love should be expressed. He showers His love and teaches everyone how to love. Hence, experience this love and joy in your life and live in peace.
- BABA
'' தேவி '' என்ற வார்த்தை , தீய சக்திகளை அடக்கி,ஸத்வ குணம் கொண்ட நல்லோரைக் காப்பதற்காக ,தெய்வீக சக்தியானது ரஜோ குணம் பொருந்திய உருவத்தை ஏற்பதைக் குறிக்கிறது. எப்போதெல்லாம் அநீதி, ஒழுக்கமின்மை மற்றும் அஸத்யம் ஆகியவை பூதாகரமாக வளர்ந்து மரண தாண்டவம் ஆடுகின்றனவோ, எப்பொதெல்லாம் சுயநலமும், தன்னலமும் கட்டற்றுப் போகின்றதோ, எப்போதெல்லாம் மனிதர்கள் இரக்கம் மற்றும் கருணை என்பதையே இழந்து நிற்கிறார்களோ, பரமாத்மா என்ற இறைவன் சக்தியின் வடிவேற்று, தீய குணங்களை அழிக்கிறார்.தசரா பண்டிகையின் உட் பொருள் இதுதான். நற்குணங்களை பெருக்கிக் கொள்ளுங்கள். அனைத்து மனிதர்களிடமும் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லா பண்டிகைககளும் ஒவ்வொருரிடமும்,தெய்வீக அன்பை மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப் பட்டுள்ளன.இப்படிப்பட்ட அன்பை அளிப்பதற்காகத் தான் இறைவன் உலகில் அவதாரம் எடுக்கிறான். அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவன் தானே செய்து காட்டுகிறான். அவன் தனது அன்பைப் பொழிந்து, ஒவ்வொருவரும் எவ்வாறு அன்பு செலுத்த வேண்டும் என்று கற்றுத் தருகிறான். எனவே இந்த அன்பையும் ஆனந்தத்தையும் அனுபவித்து, அமைதியாக வாழுங்கள்.
- பாபா