azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

During the ten days of the Dasara, the Rakshasas (demons) in the form of wicked qualities are destroyed. Rakshasas do not mean demonic beings. The bad qualities in people are the demons. Arrogance is a demon. Bad thoughts are demons. When the Lord metes out a punishment, it may appear harsh. They depend on the time, place and the circumstances in which the Lord acts. Butter can be split with a finger. But a powerful hammer is needed to break a piece of iron. The Lord deals with Sathwic persons in a Sathwic way. The Lord applies the Rajasic weapon against Rajasic persons. Unknowingly, people attribute dreaded forms and qualities to the Divine. This is not proper. The Divine has only one attribute, Love. Love is God. Love pervades the Cosmos. View the world through the eyes of love and you will experience bliss.
- BABA
தசராவின் பத்து நாட்களின் போது, தீய குணங்கள் என்ற உருவில் இருக்கும் ராக்ஷஸர்கள் அழிக்கப் படுகிறார்கள். ராக்ஷஸர்கள் என்றால், பிசாசுகள் அல்ல. மனிதர்களிடம் உள்ள தீய குணங்களே ராக்ஷஸர்கள். ஆணவம் ஒரு பிசாசு; தீய எண்ணங்கள் ஒரு பிசாசு. இறைவன் ஒரு தண்டனை அளிக்கும்போது அது கடுமையானதாகத் தோன்றலாம். அவை கால,தேச,மற்றும் எந்த சூழ்நிலைகளில் இறைவன் செயல் ஆற்றுகிறான் என்பதைப் பொறுத்து இருக்கும். வெண்ணையை ஒரு விரலால் பிரித்து விடலாம். ஆனால் சக்தி வாய்ந்த சுத்தியலால் தான் ஒரு இரும்புத் துண்டைப் பிளக்க முடியும். இறைவன் ஸாத்வீக குணம் படைத்தவரை,ஸாத்வீக வழியில் கையாளுகிறான். ரஜோ குணம் படைத்தவர் மீது ரஜோ குணமுள்ள ஆயுதத்தைப் பயன்படுத்துகிறான். அறியாமல் மனிதர்கள் பயங்கரமான உருவங்களையும் , குணங்களையும் இறைவனுக்குக் கற்பித்து விடுகிறார்கள். இது சரியல்ல. இறைவனது பண்பு ஒன்றுதான். அதுவே அன்பு. அன்பே இறைவன். அன்பு இந்தப் பிரபஞ்சம் அனைத்திலும் ஊடுருவி உள்ளது. இந்த உலகை அன்பின் பார்வை கொண்டு நோக்குங்கள்; நீங்கள் பேரானந்தத்தை அனுபவிப்பீர்கள்.
- பாபா