azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 03 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 03 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

In this age of Kali, human beings are moving about like cruel beasts. Compassion and love are vanishing. Ostentatious living is the order of the day. Everyone may claim that they love God. Hardly one in a million is a true lover of God. To deride God during times of adversity and to praise God in conditions of prosperity cannot be called true love of God. Divine love is that which does not flinch in the face of difficulties and does not gloat over prosperity and remains equally serene in all circumstances. Life is full of vicissitudes, which are transient. True love should remain unaffected by weal or woe. As long as you are full of hatred, the world will appear as a hate-filled world. It is only when love is developed that the dualism of good and evil can be transcended and the joy of oneness with the Divine experienced.
- BABA
இந்த கலி யுகத்தில்,மனதர்கள் கொடூர விலங்குகளைப் போலத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். கருணையும், அன்பும் மறைந்து கொண்டிருக்கின்றன. ஆடம்பரமான வாழ்க்கை வழக்கமான ஒன்றாகி விட்டது. ஒவ்வொருவரும் தான் இறைவனை நேசிப்பதாகப் பறை சாற்றிக் கொள்ளலாம். பல லக்ஷங்களில் ஒருவர் தான் உண்மையாகவே இறைவனிடம் அன்பு கொண்டவராக இருக்கிறார்கள். இன்னல் வரும் போது இறைவனை இகழ்வதும், வளமை பெறும் போது இறைவனை வாழ்த்துவதும் இறைவன் மேல் கொண்ட உண்மையான அன்பு ஆகாது. தெய்வீக அன்பு என்பது துன்பங்களை எதிர் கொள்ளும் போது முகம் சிணுங்காது, வளமைகளைக் கண்டு கிளர்ந்தெழாது, எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியான தெளிந்த அமைதியோடு இருப்பதுதான். வாழ்க்கை முழுவதும் நிலையற்ற பிரச்சனைகள் நிறைந்தது தான். உண்மையான அன்பு என்பது இன்ப துன்பங்களால் பாதிக்கப் படாமல் இருப்பதே. நீங்கள் வெறுப்புக்களால் நிறைந்திருக்கும் வரை இந்த உலகமும் வெறுப்புக்கள் நிறைந்த ஒன்றாகவே தோன்றும். அன்பை பெருக்கிக் கொள்ளும் போது மட்டும் தான், நன்மை ,தீமை என்ற இரட்டை நிலையைக் கடந்து, இறைவனோடு ஒன்றாகின்ற ஆனந்தத்தை அனுபவிக்க இயலும்.
- பாபா