azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Gandhiji looked upon India as one country. He planted the seed of unity of all faiths and all communities, which under his guidance grew quickly into a big tree. He built a great movement on the basis of Atmabalam (soul-force) that strengthened unity and self-confidence. There was a lot of suffering while the freedom movement was on. But sufferings are the prelude to success. Sathyagraha was the path of Truth and Love, of the means being as pure as the ends. He who accepts criticism gladly and thanks the critic for his remarks is the one really human. Since Gandhi was willing to learn and had the humility to acknowledge criticism, he could mould the people of his land and be hailed as the Father of the Nation.
- BABA
காந்திஜி இந்தியா அனைத்தையும் ஒரே நாடாகத் தான் கருதினார்.அனைத்து மதங்கள் மற்றும் குலங்களின் ஒற்றுமை என்ற விதையை நட்டார்; அது அவரது வழிகாட்டலின் மூலம் பெரிய மரமாக வேகமாக வளர்ந்தது. ஆத்ம பலத்தின் அடிப்படையிலான மிகப் பெரிய இயக்கத்தை வளர்த்தார்; அது ஒற்றுமைக்கும், தன்னம்பிக்கைக்கும் ஊட்டமளித்தது.சுதந்திரப் போராட்டத்தின் போது, பல இன்னல்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் இன்னல்கள்தான் வெற்றிக்கு முன் வருபவை. மேற் கொள்ளும் வழிகளும் முடிவைப் போலவே புனிதமாக இருக்கும் சத்யாக்ரஹம், சத்தியம் மற்றும் அன்பின் பாதையாகும். விமரிசனத்தை விரும்பி ஏற்று, தன்னை விமரிசத்தவரின் வார்த்தைகளுக்கு நன்றி கூறுபவனே உண்மையான மனிதன். எதையும் கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருந்து, விமரிசனங்களைப் பணிவுடன் ஏற்றுக் கொண்டதால் தான், காந்திஜியால் , அவரது நாட்டு மக்களை, தன் வழியில் உருவாக்க முடிந்து, தேசப்பிதா என்ற போற்றுதலையும் பெற முடிந்தது.
- பாபா