azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Oct 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

You may think that you are enjoying the pleasures; but really speaking, it is the pleasures that are enjoying you. They sap your energies, dry up your discrimination, consume your allotted years, and infest your mind with egoism, envy, malice, hate, greed and lust. Many who claim to revere the Vedas and Shaastras (scriptures) are not practising what they teach. The scriptures teach that it is important to remove the weeds of lust and greed, of hate and pride in the garden of your heart. In the grounds thus cleared, plant the fragrant flowering plants of Prema (love) and cultivate tasty fruit-bearing trees of Dharma (virtue). Never plunge into action spurred by momentary impulse; ponder deeply over the pros and cons; weigh the expected benefits against the likely harm; then act so that you escape pain and you do not inflict pain on others. This is true in worldly matters as well as in the spiritual field.
- BABA
நீங்கள் இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்; ஆனால் உண்மையில், அவைகள்தான் உங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அவை உங்களது சக்தியை உறிஞ்சி, பகுத்தறிவை வீணடித்து, உங்களது வாழ்நாட்களை விழுங்கி, உங்கள் மனதில் அஹங்காரம், பொறாமை, வன்மம், வெறுப்பு, பேராசை மற்றும் காமம் ஆகியவற்றைப் பரப்புகின்றன. வேதங்களையும் ,சாஸ்திரங்களையும் மதிக்கிறோம் என்று பறை சாற்றும் பலர், அவர்கள் போதிப்பதை அவர்களே கடைப் பிடிப்பதில்லை. புனித நூல்கள், மனம் என்ற தோட்டத்திலிருந்து காமம்,பேராசை,வெறுப்பு மற்றும் ஆணவம் என்ற களைகளைக் களைவது அவசியம் என்று போதிக்கின்றன. இப்படிப் பண்படுத்த நிலத்தில்,நறுமணப் பூக்களை அளிக்கும் அன்பு என்ற செடிகளை நட்டு, சுவையான பழங்களைத் தரும் தர்மம் என்ற மரங்களை வளர்க்க வேண்டும். கண நேரத்தில் வரும் எழுச்சியால் உந்தப்பட்ட செயல்களில் இறங்காதீர்கள்; நல்லவை,கெட்டவை ஆகியவற்றை ஆழ்ந்து சிந்தியுங்கள்; கிடைக்கக்கூடிய நன்மைகளையும், விளையக்கூடிய தீமைகளையும் சீர் தூக்கிப் பாருங்கள். பிறகு செயலில் ஈடுபட்டால், நீங்கள் துன்பத்திலிருந்து தப்பிப்பதோடு, மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிக்காமல் இருக்கலாம். இது உலகியலான விஷயங்களுக்கு மட்டுமின்றி ஆன்மீக விஷயங்களுக்கும் பொருந்தும்.
- பாபா