azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 30 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 30 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The Universal being is the five elements. He is the breath that sustains life in all beings. He is the fire that illumines all. He is the rain that feeds the plants that provide sustenance to all. So, He can be adored as having graciously assumed all these beneficent forms. This approach through the benign manifestations of the various facts and features of life is the Angavathi path. ‘Anga’ means a ‘limb’, a ‘fact’, or a ‘feature’. Picturing the many-faceted Divine and symbolising, in perceivable ways, the attributes that are evidenced in each facet, is the Anyavathi Path. For instance, the facet to which is ascribed the power and willingness to overcome obstacles is Lord Vighneswara, whose single tusk symbolizes sharpness and concentration. Seekers meditate on these pleasing personifications and the significance of the symbols of their attributes and adore the Divine in the delight that wells up in their hearts. This is named the Anyavathi Path—the path through symbolized Divinity.
- BABA
பிரபஞ்சமனைத்தும் உறையும் இறைவன் பஞ்சபூதங்களாக இருக்கிறான். அனைத்து ஜீவ ராசிகளிலும் உயிரைத் தாங்கும் பிராணனாக இருக்கிறான். அனைத்திற்கும் ஒளி அளிக்கும் நெருப்பும் அவனே. எல்லாவற்றிற்கும் உணவளிக்கும் தாவரங்களுக்கு ஊட்டமளிக்கும் மழையும் அவனே. நன்மை பயக்கும் இவ்வாறான அனைத்து உருவங்களையும் கருணையுடன் ஏற்றுக் கொண்டவனாக அவனை போற்றித் துதிக்கலாம். வாழ்வின் பல்வேறு அம்சங்களாக, அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உருவகங்களின் மூலம், துதிப்பதே ''அங்கவதி '' வழியாகும். ''அங்க '' என்றால் அங்கம்,உறுப்பு,அம்சம் என்று பொருள். பல முகங்கொண்ட தெய்வீகத்தை, மனதில் படம் பிடித்து, ஒவ்வொரு முகத்திலும் காணப்படும் குணாதிசியங்களை, பல்வேறு வழிகளில், சின்னங்களாகத் துதிப்பது '' அன்யவதி '' பாதையாகும். உதாரணமாக, தடைகளைக் களைவதற்கான சக்தி, விருப்பம் போன்ற அம்சங்களை, முனைப்பையும்,புத்தி கூர்மையையும் தனது ஒற்றைத் தும்பிக்கையால் காட்டும் விக்னேஸ்வரனாகத் துதிப்பது. ஆன்மீக சாதகர்கள்,இப்படிப்பட்ட இனிமையான உருவங்கள் மற்றும் அவற்றின் குணாதிசியங்களைக் குறிக்கும் சின்னங்களின் சிறப்பு ஆகியவற்றைத் தியானித்து, மனதில் ஆனந்தம் பொங்க இறைவனைப் போற்றுகிறார்கள். உருவகப்படுத்தப் பட்ட தெய்வீகத்தை இவ்வாறு போற்றுகின்ற முறைக்கு '' அன்யவதி '' பாதை என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- பாபா