azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 29 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 29 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

To concentrate effectively, fix your attention on a form that gives you joy. Sit in the Padmasana (lotus) pose and fix your eyes on the tip of your nose. In the beginning, practice meditation for a minute; then for three minutes. A few days later, try for six minutes and after some time, for as long as nine minutes. Thus, the concentration has to be strengthened gradually, without undue hurry. Slowly, the mind can be held for even half an hour. Slowly and steadily, the discipline must be developed. With practice, the mind will get fixed and the power of concentration will increase. To attain concentration and acquire one-pointedness, you must undergo exertion to some extent. You must fasten your mind on the Lord and keep off all other thoughts from the mental plane. By constant exercise of this type, your vision will be firmly fixed on the Lord residing in your heart. That is, verily, the goal, the full fruition of meditation.
- BABA
தியானத்தை திறம்படச் செய்வதற்கு,உங்களுக்கு ஆனந்தம் அளிக்கும் தெய்வீக ரூபத்தில் கவனம் செலுத்துங்கள். பத்மாஸனத்தில் அமர்ந்து, உங்கள் கண்பார்வையை மூக்கின் நுனியில் நிலை பெறச் செய்யுங்கள்.ஆரம்பத்தில் தியானத்தை ஒரு நிமிடம் செய்யுங்கள், பிறகு மூன்று நிமிடம் செய்யுங்கள். சில தினங்களுக்குப் பிறகு ஆறு நிமிடங்களுக்கு முயற்சி செய்யுங்கள்; சில காலத்திற்குப் பிறகு ஒன்பது நிமிடம் வரை நீட்டுங்கள். இவ்வாறு முனைப்பை, அளவு மீறி அவசரப்படாது, படிப்படியாக வலுப்படுத்துங்கள். மெதுவாக, மனதை அரை மணி நேரம் கூட நிலையாக நிறுத்த முடியும். மெதுவாகவும்,நிதானமாகவும்,இந்தக் கட்டுப்பாட்டை வளர்க்க வேண்டும். பயிற்சியின் மூலம் மனம் நிலை கொண்டு, தியானத்தின் வலிமை அதிகரிக்கும். முனைப்பும், ஒரே நிலையான நோக்கும் பெற ஓரளவு நீங்கள் உழைக்க வேண்டும். உங்கள் மனதை இறைவனோடு பிணைத்து, மனத்தளத்திலிருந்து மற்ற அனைத்து எண்ணங்களையும் தள்ளி வைத்து விடுங்கள். இடைவிடாது இப்படி பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் திருஷ்டி,உங்கள் இதயத்தில் உறையும் இறைவன் மீது நிலை கொள்ளும். அதுவே, உண்மையில் தியானத்தின் முழுப்பயனும், குறிக்கோளும் ஆகும்.
- பாபா