azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 28 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 28 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Upasana means the acquisition of the Presence of the Divine, the achievement of the Bliss of adoration. Vedic tradition sanctions four paths as legitimate and fruitful to win this achievement. They are called Sathyavathi, Angavathi, Anyavathi and Nidaanavathi. We shall consider the path of Sathyavathi today. The scripture defines the Divine thus: “Sarva Vyaapinam Aatmaanam, Ksheere sarpith iva arpitham”—The Atma is immanent everywhere, just as ghee inter-penetrates every drop of milk. When the seeker pursues the Truth with this conviction urging his endeavour, his spiritual practices are called Sathyavathi (Truth-based). “Maaya thitham idam sarvam, jagada-vyaktha moorthinaa,” the Lord declares. “In My latent form, I am in entire Creation, operating the mystery. See in Me all this, see all this as Me.” When one succeeds in this effort the Sathyavathi path will lead to success. “I shall be visible to you as all this and in all this,” the Lord assures. The Lord promises this vision of Immanence and Transcendence to whomsoever that persists with sincerity on this Sathyavathi path.
- BABA
' உபாஸனை ' என்றால், போற்றித் துதிப்பதன் பேரானந்த வெற்றியான இறைவனின் அருகாமையைப் பெறுவது என்று பொருள். வேத சம்பிரதாயங்கள், இந்த சாதனைக்கான நான்கு வழிகளுக்கு , நியாயமானவை மற்றும் பயனளிப்பவை என்று ஒப்புதல் அளித்துள்ளன. அவையே ஸத்யவதி, அங்கவதி, அன்யவதி மற்றும் நிதானவதி என்பவை. இன்று ஸத்யவதி என்ற பாதையை எடுத்துக் கொள்வோம். தெய்வீகத்தை, மறைநூல்கள் , ''ஸர்வ வ்யாபீனம் ஆத்மானம், க்ஷீரே ஸர்பித் இவா அர்ப்பிதம் ''- அதாவது ,பாலின் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவி உறையும் நெய்யைப் போல, ஆத்மா எங்கும் நிறைந்துள்ளது என விளக்குகின்றன. ஆன்மீக சாதகர் எப்போது இந்த திட நம்பிக்கையோடு, ஸத்தியத்தை அடைய தனது பெறுமுயற்சியைத் தொடர்கிறாரோ, அந்த ஆன்மீக சாதனைகளே ஸத்யவதி எனப்படும். '' மாயா திதம் இதம் ஸர்வம், ஜகத் வ்யக்த மூர்த்தினா'' அதாவது,'' உள்ளுறையும் நிலையில், படைப்புகள் அனைத்திலும் இருந்து புரியாத புதிராக இயங்குகிறேன். என்னை இவை அனைத்திலும் காண்பாயாக. இவை அனைத்தும் நானே என உணர்வாயாக '' என இறைவன் அறிவிக்கிறான். இந்த முயற்சியில் ஈடுபடுவோரை ஸத்யவதிப் பாதை வெற்றிக்கு இட்டுச் செல்லும். '' இவை அனைத்துமாக, இவை அனைத்திலும் நான் காட்சி தருவேன் '' என இறைவன் வாக்குறுதி அளிக்கிறான். இந்த ஸத்யவதிப் பாதையில் தொடர்ந்து, மனமார்ந்து முயல்வோர் எவருக்கும் இந்த உள்ளுறைந்து, அனைத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கும் தெய்வீகத்தின் காட்சியை அளிப்பேன் என்று இறைவன் உறுதிமொழி அளிக்கிறான்.
- பாபா