azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 26 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 26 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The root of the word ‘Veda’ means ‘to know’. Vedas are also known as Chandas. This name means pleasant, joyous. It also conveys an important aspect of the Vedas—shielding, fostering, promoting the welfare of humans engaged in the unceasing round of worldly affairs, and conferring the ultimate liberation. Humans are ever caught up in activities pursued with the profit available as the purpose. They have to be moulded as righteous men and women. The Vedas have to shield the Karma-lovers from destruction from the evil temptation to court unrighteousness, and the inquiry-fond Jnana seekers from the evil temptation to pursue the pleasure-bound senses. Through their role as armour or shield, they shower Bliss on everyone who rely on them. The sacred ceremonies and rituals that Vedas expound confer joy and bliss not only on the participants but also on the entire world and even the worlds beyond.
- BABA
'வேதம்' என்ற வார்த்தையின் மூலப் பொருள் ' அறிந்து கொள்வது' என்பதாகும். வேதங்களை,' சந்தஸ்' என்றும் அழைப்பதுண்டு. இந்தப் பெயருக்கு இனிமையானது, மகிழ்ச்சி அளிப்பது என்று பொருள். முடிவே இல்லாத உலகச் செயல்கள் என்ற சக்கரத்தில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களின் நலனைப் பேணிக் காத்து,வளர்த்து,அவர்களுக்கு இறுதியான முக்தியை அளிப்பது என்ற வேதங்களின் முக்கிய அம்சத்தை இது பறை சாற்றுக்¢றது. லாபத்தையே நோக்கமாகக் கொண்டுள்ள செயல்களை ஆற்றுவதிலேயே, மனிதர்கள் எப்போதும் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்களை தார்மீக ஆண், பெண்களாக உருவாக்க வேண்டும். வேதங்கள், அதர்மத்தை நாடும் தீய கவர்ச்சியால் ஏற்படும் நாசத்திலிருந்து கர்மாவை விரும்புபவரைக் காப்பாற்றியாக வேண்டும்; ஆராய்வில் நாட்டமுடைய ஞானம் விரும்புவோரை, புலனின்பங்களைத் தேடும் கவர்ச்சியிலிருந்தும் காக்க வேண்டும். ஒரு கவசம் போல இருப்பதன் மூலம், அவற்றைச் சார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆனந்தத்தை வேதங்கள் அளிக்கின்றன. வேதங்கள் அறிவுறுத்துகின்ற புனிதமான சடங்குகள், அவற்றில் ஈடுபடுவோருக்கு மற்றுமின்றி, அனைத்து உலகத்தினருக்கும்,ஏன் இந்த உலகத்திற்கு அப்பாற்பட்டும் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கின்றன.
- பாபா