azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Control your senses as well as the mind. Remember, the senses can do nothing by themselves. They are not independent. If the mind is brought under control, the senses can also be controlled. Some people undergo mere asceticism of the senses in order to control the mind! They are ignorant of the real discipline that is necessary. Real discipline is the destruction of desire. However vigilant warders may be, a clever robber can still steal in a hundred amazing ways. So too, however skillfully you may try to control the senses, the mind will drag them to its side and execute its desires through them. Therefore, the aspirant should establish mastery over the external senses. Then, the mind, immersed in the Vishaya, the continuous succession of worldly relationships, has to be controlled by means of Shanthi (peace) and Vairagya (renunciation). When that is done, one can experience Ananda (spiritual bliss) and visualise the Atma (Divine Self) within at all times.
- BABA
உங்கள் மனம் மற்றும் புலன்களைக் கட்டுப் படுத்துங்கள். புலன்கள் மட்டும் தாங்களாகவே எதையும் செய்ய இயலாதவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை சுதந்திரமானவை அல்ல.மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால்,புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். சிலர் மனதைக் கட்டுப்படுத்த வெறும் துறவுக்கோலம் கொள்கிறார்கள்! இதற்குத் தேவையான உண்மையான ஒழுங்கு முறையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆசைகளைக் களைவதே உண்மையான ஒழுக்க நெறியாகும். காவலர்கள் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும், திறமை படைத்த திருடன் எப்படியும் வியக்கத்தக்க நூறு வழிகளில் திருடி விடுவான். அதே போல, நீங்கள் எவ்வளவு தான் செயல் திறனோடு புலன்களைக் கட்டுப் படுத்த முயன்றாலும்,மனம் அவற்றை பக்கவாட்டில் இழுத்து,தனது ஆசைகளை அவற்றின் மூலம் பூர்த்தி செய்து கொண்டு விடும். எனவே, சாதகர் வெளிப்புற புலன்களின் மீது தனது ஆதிக்கத்தைக் கொண்டு வர வேண்டும். பிறகு, தொடர்ந்து வரும் உலகியலான உறவுகளில் மூழ்கிக் கிடக்கும் மனதை, சாந்தி மற்றும் வைராக்கியத்தினால் கட்டுப் படுத்த வேண்டும். இதைச் செய்து விட்டால், பேரானந்தத்தை அனுபவிப்பதோடு, ஆத்மாவையும் ,தனக்குள்ளேயே எப்போதும் கண்கூடாகக் காண முடியும்.
- பாபா