azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 22 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 22 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The Atma (soul) that is the core of a human being is not born. Since it does not take birth, it does not meet death. Death happens to the body with which the soul is associated. The delusion that the body is the core, that the body is real, is verily death! To be free from that delusion is to attain immortality. One can negate the consciousness that the body is oneself by practicing deeply elevating spiritual practices and fearlessly inquiring into one’s Truth. Consider the fruit of the tamarind tree. When unripe, it is not easy to separate the rind, the pulp and the seed. So too, those who are attached to sensual desires and to pampering the body, cannot earn the awareness of the Atma (soul). When the tamarind fruit becomes ripe, the rind can be broken off, the pulp gets detached from the seed and the seed can be isolated without much effort. Inquiry and unselfish activity ripen the consciousness and the Atma (soul) can then be isolated from the body, clear and pure.
- BABA
மனிதனுக்கு அடிப்படையான ஆத்மாவிற்கு பிறப்பு என்பது இல்லை.அது பிறப்பு எடுக்காததால் இறப்பையும் சந்திப்பதில்லை.ஆத்மாவுடன் இணைந்திருக்கும் உடலுக்குத் தான் இறப்பு ஏற்படுகிறது.இந்த உடல்தான் அடிப்படை,இது நிஜமானது என்ற மாயையே ஒரு சாவு போன்றது தான்! அமரத்துவத்தை அடைவது என்பது இந்த மாயையிலிருந்து விடுபவதே. ஆழ்ந்த மேன்மை பயக்கும் ஆன்மீக சாதனைகளைப் பயிலுவது மற்றும் அஞ்சாது ஒருவரது உண்மை நிலையை ஆராய்வது ஆகியவை மூலம் இந்த உடல் தான் ஒருவர் என்ற உணர்வை, இல்லை என்றாக்க முடியும்.புளிய மரத்தின் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.அது காயாக இருக்கும் போது அதனது பட்டை,கொட்டை மற்றும் பழக்கூழை தனித்தனியாகப் பிரிக்க முடியாது. அதே போல்,புலனின்பங்களில் ஈடுபாடு கொண்டு,உடலை அதிகமாக சீராட்டுபவர்களால் ஆத்ம உணர்வைப் பெற முடியாது. புளியம்பழம் பழுத்தவுடன், அதன் பட்டையை உரித்து விடலாம்;பழக்கூழும் விதையிலிருந்து விலகி விடும்; அதன் கொட்டையை அதிக முயற்சியின்றி தனியாக எடுத்து விடலாம். ஆராய்வு மற்றும் சுயநலமற்ற பணிகள் , விழிப்புணர்வை பழுக்கச் செய்கிறது; பிறகு ஆத்மாவை,உடலிலிருந்து எளிதாகவும், தூய்மையாகவும் தனிமைப் படுத்தி உணர முடியும்.
- பாபா