azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The body, the sense organs, the mind and the intellect are the instruments for a human being. Only when one understands the secrets of these instruments will one be able to comprehend the Atmic Principle. If you cannot understand the vesture you are wearing, how can you understand the mystery of the infinite, indwelling Spirit? The body is the basic instrument for all the actions in life and for the acquisition of all knowledge and skills. It should be regarded primarily as an instrument for the realization of the Divine. Attachment to the body for physical pleasures should be given up. It is essentially sacred and precious for it is the abode of the Atma and should be used only for sacred purposes.
- BABA
உடல்,புலனுறுப்புக்கள், மனம், மற்றும் புத்தி யாவும் மனிதனுடைய உபகரணங்கள். இவற்றின் ரகசியத்தைப் புரிந்து கொண்டால் தான்,ஒருவர் ஆத்ம தத்துவத்தைப் புரிந்து கொள்ள இயலும். நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் ஆடையையே புரிந்து கொள்ளாவிட்டால்,உள் உறையும் அளவற்ற ஆத்மாவின் மர்மத்தை எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறீர்கள்? வாழ்வின் எல்லாச் செயல்களுக்கும், அறிவு மற்றும் திறமைகளைப் பெறுவதற்கும் அடிப்படையான கருவி இந்த உடலே. இதை தெய்வீகத்தைப் பற்றிய தெளிவடைவதற்கான,முதன்மையான கருவியாகக் கருதப் பட வேண்டும். உடல் ரீதியான இன்பங்களுக்காக இதன் மீது பற்று கொள்வதை விட்டு விட வேண்டும். ஆத்மாவின் உறைவிடமாதலால், இது அடிப்படையில் புனிதமானதும், விலை மதிப்பற்றதும் ஆகும்; புனிதமான செயல்களுக்கே இதைப் பயன் படுத்த வேண்டும்.
- பாபா