azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Impulses and desires have to be suppressed in order to get mastery over the mind. Desires excite the mind and make it rush towards the senses, as a dog runs behind its master. Undertake the repetition of the Divine Name and meditation. Further, cultivate and develop your will, memory, and imagination along proper lines. To gain control over the unsteadiness of the mind, meditation is of great help. It is not enough if one sense is conquered; all should be mastered, from all sides. Of course, this is a very hard task; you might feel like giving up the entire struggle. But never lose heart. Be patient and persevering, and the ultimate success will be yours. Only, you should not, like some spiritual aspirants, stray from the path of discipline as soon as you feel you are not succeeding as much as you hoped. That is not the road to victory. Persevere, be patient, and earn victory in the end.
- BABA
மனதை ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்கு,உணர்ச்சி வேகங்களையும் ஆசைகளையும் அடக்கி ஆள வேண்டும். ஆசைகள் மனதில் கிளர்வூட்டி,ஒரு நாய் எப்படி எஜமானனின் பின் ஓடுகிறதோ, அவ்வாறே புலன்களின் பின்னால் பாயச் செய்கின்றன. நாமஸ்மரணையையும் தியானத்தையும் மேற்கொள்ளுங்கள். மேலும், உங்களது மனத்திண்மை,ஞாபகசக்தி மற்றும் கற்பனைகளை சரியான வழியில் பேணி ,மேம்படுத்திக் கொள்ளுங்கள். மனதின் சஞ்சலத்தன்மையைக் கட்டுப் படுத்த தியானம் மிகவும் உதவி செய்கிறது. ஒரு புலனை மட்டும் வென்றால் போதாது; அனைத்தையும், எல்லாவிதங்களிலும் வெற்றி கொள்ள வேண்டும். இது கடினமான பணி என்பது உண்மைதான்;இந்தப் போராட்டத்தைக் கைவிட்டு விடலாம் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் மனதை ஒருபோதும் தளரவிடாதீர்கள். பொறுமையுடன் தொடர்ந்து முயலுங்கள் ; முடிவில் வெற்றி உங்களுடையதே. தாங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்க வில்லை என்றவுடனேயே, சில ஆன்மீக சாதகர்களைப் போல, கட்டுக் கோப்பான பாதையில் இருந்து நீங்கள் பிரண்டு விட மட்டும் கூடாது. அது வெற்றிக்கான பாதை அல்ல. தொடர்ந்து முயன்று, பொறுமை கொண்டு இறுதியில் வெற்றி காணுங்கள்.
- பாபா