azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

One must pay attention not only to one’s own advancement and that of one’s family and society, but also to the advancement of the people in general. Man has to live an exemplary life and hold forth elevating ideals worth emulation by everyone. No attempt should be made to belittle the society and benefit only the family, for it is bound to fail. One must have wider visions of the peace and prosperity of all mankind, and try to contribute to both, within the limits of one’s capacity and resources. By the time one reaches old age, one must have discovered that the worldly joys are trivial and fleeting. One must be equipped with the higher knowledge of spiritual joy by delving into the inner spring of bliss. One’s heart must have softened through one’s experiences and one should strive to promote the progress of all beings without any distinction. One must also be eager to share with others the wisdom gleaned from one’s vast experience.
- BABA
ஒருவர், தனது, தன்னுடைய குடும்பம், தன்னுடைய சமூகம் இவற்றின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுவாக அனைவரது முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மனிதன் சீரிய வாழ்க்கை வாழ்ந்து, ஒவ்வொரும் பின்பற்றத் தக்க உயரிய இலட்சியங்களை சிரமேற்கொள்ள வேண்டும். சமுதாயத்தை சிறுமைப் படுத்தி, தனது குடும்பத்திற்கு மட்டும் ஆதாயம் தேடும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது; ஏனெனில் அது கட்டாயம் தோல்வி அடையும். அனைத்து மனித குலத்தின் அமைதி மற்றும் மேம்பாடு என்ற பரந்த தொலைநோக்குடன், தமது திறமை மற்றும் வசதிகளுக்கு ஏற்ப, இவை இரண்டிற்காகவும் ஒருவர் தமது பங்கை ஆற்ற முயல வேண்டும். ஒருவர் முதுமை நிலையை அடையும் போது, உலகியலான இன்பங்கள் அற்பமானவை, நிலையற்றவை என்பதைப் புரிந்து கொண்டிருப்பார். உள்ளார்ந்து இருக்கும் ஆனந்த ஊற்றில் மூழ்கி, ஒருவர், உயர்ந்த அறிவான ஆன்மீகப் பேரானந்தத்தைப் பெற்றிருக்க வேண்டும். தமது அனுபவங்களினால், ஒருவரது இதயம் கனிந்து இருக்கும்; இந்நிலையில்,எந்த வேறுபாடுமின்றி அனைவரது முன்னேற்றத்தையும் மேம்படச் செய்ய ஒருவர் முயல வேண்டும். தமது பரந்த அனுபவங்களின் மூலம் தெளிவடைந்த ஞானத்தை, பிறருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல் கொள்ள வேண்டும்.
- பாபா