azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Youth should share with society the means and measures for its progress and security. They must be ideal role models to those younger than them and guide them into socially useful paths. At the same time, they must follow the footsteps of their elders and learn from them lessons for their own advancement. Practice is as important for confirming one in wisdom, as reading for confirming one in knowledge. Alongside of knowledge, youth have to cultivate the good qualities of humility, reverence, devotion to God and steadfast faith. They have to engage in good works and enjoy them for the sheer elation they confer. Along with the earning of wealth and involvement in the improvement of society, attention must be paid to the promotion and preservation of virtues and to the observance of moral codes. Steps should be taken for improving one’s righteous behaviour and Sadhana (spiritual practices). All levels of consciousness have to be purified and then directed to holy tasks.
- BABA
இளைஞர்கள் சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக, தங்களது அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தங்களை விட இளையவர்களுக்கு ஒரு சீரிய முன்னுதாரணமாக திகழ்ந்து, அவர்கள் சமுதாயத்திற்குப் பயன்படக் கூடிய பாதைகளில் செல்வதற்கு வழி காட்ட வேண்டும். அதே சமயம் ,தமது மூத்தவர்களின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி, அவர்களிடமிருந்து தங்களது முன்னேற்றத்திற்கான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்பது எப்படி ஒருவருள் அறிவை உறுதி செய்கிறதோ, அவற்றைக் கடைப் பிடிப்பது அவருள் ஞானத்தை உறுதி செய்ய மிக முக்கியமானதாகும். கல்வி அறிவுடன் கூடவே. இளைஞர்கள் நற்குணங்களான பணிவு,மரியாதை,இறைபக்தி மற்றும் நிலை குலையாத நம்பிக்கை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். நற்பணிகளில் ஈடுபட்டு, அவை அளிக்கும் எழுச்சிக்காகவே அவற்றை அனுபவிக்க வேண்டும். செல்வம் ஈட்டுவது மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் பங்கு கொள்வது ஆகியவற்றுடன் கூடவே, நற்பண்புகளைப் பேணிக் காப்பதிலும், ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதிலும் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். தமது தார்மீகமான செயல்பாடுகள் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்ளுணர்வுகளின் எல்லா நிலைகளையும் தூய்மைப் படுத்தி, அவற்றைப் பிறகு புனிதப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
- பாபா