azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Seeking praise and avoiding blame are impure impulses. The world is a nest of crows; some caw in praise, some caw in derision. But you should be above the reach of praise and blame. Make light of praise. Then only can you be free and enjoy real happiness. Everyone loves his own religion, his own native place and himself; he loves his own methods of worship and forms and ceremonies. This love takes the form of praise of one’s own creed and blame of the other’s faith. Though all this is related to one’s relationship with God, such impulses are and must be classed under impure impulses. Be wary of these in you. Such mean attitudes, saturated with ignorance, have to be removed by repetition of the name and meditation that fill the heart with broad and universal Atmic wisdom. Then the impulses will be transformed and transmuted into holy impulses and will vanish.
- BABA
புகழ்ச்சியை நாடுவதும்,இகழ்ச்சியைத் தவிர்ப்பதும், தூய்மையற்ற உணர்ச்சி வேகங்களே. இந்த உலகம் காக்கைகளின் கூடு போன்றது; சில காகங்கள் புகழ்ச்சியாகக் கரையும், சில ஏளனமாகக் கரையும். ஆனால் நீங்கள் புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டிற்கும் எட்டாத உயரத்தில் இருக்க வேண்டும் . புகழ்ச்சிக்குக் குறைந்த முக்கியத்துவம் கொடுங்கள். அப்போது தான்,நீங்கள் சுதந்திரமாக, உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க இயலும். ஒவ்வொருவரும் தனது மதத்தையும், தனது சொந்த ஊரையும்,தன்னையுமே நேசிக்கிறார்கள்; தான் கடைப் பிடிக்கும் வழிபாட்டு முறைகளையும், வணங்கும் தெய்வ உருவத்தையும்,சடங்குகளையும் நேசிக்கிறார்கள். இந்த அன்பு தனது கொள்கையைப் புகழ்வதிலும், பிறரது கோட்பாடுகளை குறை கூறுவதுமாக மாறி விடுகிறது. இவை அனைத்தும் இறைவன் சம்பந்தப் பட்டதாக இருந்தாலும், இவற்றை எல்லாம் தூய்மையற்ற உணர்வுகளின் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும். இப்படிப் பட்ட உணர்வுகளிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள். அறியாமையில் தோய்ந்த, கீழ்த்தரமான இந்த உணர்ச்சி வேகங்களை , விசாலமான, எங்கும் நிறைந்த ஆத்மஞானத்தினால் இதயத்தை நிரப்ப வல்ல நாமஸ்மரணை மற்றும் தியானத்தினால், நீக்க வேண்டும். பிறகு இந்த உந்துதல்கள் மாறி, புனிதமான உணர்வுகளாக உருவெடுத்து, மறைந்து விடும்.
- பாபா