azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The Divine Self has no entry or exit, no hands and feet, no organs and limbs, no blot or blemish. It is the tiniest among the tiny, the biggest among the big. Like space, it is everywhere. It is all and so it is free from “I” and “mine.” It is consciousness; it has no affinity with distress or delusion. It is Paramananda, Supreme everlasting ecstasy. It is the core, the heart of all beings. It is the awareness in all. It is just like the sun which has no ego-sense or a sense of possession and property, and no will or want or wish. By its very presence, darkness disappears and light envelopes the world. So, Sun is also called the Enlightener. But sun is not consciously doing so, as if it is duty bound. The Atma too has neither obligation nor application. If asked how the Atma becomes a “doer,” the reply is—is the magnet a “doer,” simply because the needle which is in its neighbourhood moves?
- BABA
- BABA
ஆத்மாவிற்கு வருவது ,போவது கை, கால்கள், அவயவங்கள், குற்றம் குறைகள், என்று எதுவும் இல்லை.அது சிறியவற்றில் எல்லாம் சிறியது, பெரியவற்றில் எல்லாம் பெரியது. ஆகாயத்தைப் போன்று எங்கும் வியாபித்திருப்பது. அதுவே அனைத்தும் ஆனதால், 'நான்', ' எனது ' என்று அதற்கு இல்லை. அதுவே உணர்வு நிலை; மாயை மற்றும் துயரத்துடன் அதற்கு தொடர்பு கிடையாது. மிக உயர்ந்த, என்றும் நிலைத்திருக்கும் பரமானந்தமே அது. அனைத்திற்கும் அடிப்படையாகி, உயிரினங்களின் இதயம் போன்றது அது. அனைத்திலும் உறையும் சைதன்யம் அது. அஹங்காரமோ,உடமைகளோ, தன்னிச்சையோ, விருப்போ அற்ற சூரியனைப் போன்றது அது. அது இருப்பதாலேயே இருள் அகன்று, உலகத்தில் ஒளி படர்கிறது. எனவே தான், சூரியன் தெளிவூட்டுபவர் என்றும் அழைக்கப் படுகிறார். கடமையைச் செய்ய வேண்டுமே என்று, சூரியன் அவ்வாறு செயல் படுவதில்லை. ஆத்மாவிற்கும் கடமைகளோ, வேண்டுதல்களோ கிடையாது. ஆத்மா எப்படி அனைத்தையும் 'செய்பவர்' ஆகிறார் என்று கேட்டால்; தனது அருகாமையில் இருக்கும் ஊசி தானே நகருவதால் மட்டுமே காந்தத்தை, அவ்வாறு 'செய்பவர்' எனக் கூற இயலுமோ என்பது தான் பதிலாக இருக்கும்.
- பாபா