azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 14 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 14 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Of all the factories in the world, the factory of the body is the most wonderful, because it is the tabernacle of the Lord. In such a factory, the impulses are sublimated in to vows and the impurities are weeded out, beneficent desires are shaped, and good imaginings are brought about. Uprooting of impulses is a very difficult task. Mountains can be swept away sooner than these deep-rooted impulses. But with willpower and zest, supported by faith, they can be overcome in a short time. Impulses can overpower you and keep you down as their slave. While intoxicants enslave you and hold you in their full grip only for some time, impulses grip you for a whole lifetime! Just do not give up your determination and faith, whatever the loss, hardship, or obstacle. The entire meaning and purpose of meditation is to attain freedom from these mighty and manifold impulses.
- BABA
- BABA
உலகில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும்,மிக அற்புதமானது மனித உடலே,ஏனெனில் அது இறைவனின் உறைவிடமாகும். இப்படிப்பட்ட தொழிற்சாலையில்,உணர்ச்சி வேகங்கள் ,நல் உறுதி மொழிகளாக மாற்றப் படுகின்றன; களங்கங்கள் களையப்படுகின்றன; பயன்தரும் ஆசைகள் உருவாக்கப் படுகின்றன;நல்ல கற்பனைகள் வெளிக் கொணரப் படுகின்றன. ஆசாபாசங்களை களைவது மிகவும் கடிமான பணியே. ஆழமாக வேறூன்றி விட்ட, இந்த உணர்ச்சி வேகங்களைக் களைவதைவிட வேகமாக மலைகளைத் தகர்த்து விடலாம். ஆனால், இறைநம்பிக்கையின் துணை கொண்டு, உற்சாகம் மற்றும் மனத்திண்மையால் குறுகிய காலத்தில் இவற்றை வெல்ல முடியும். உணர்ச்சி வேகங்கள் உங்களை ஆக்ரமித்து அவற்றின் அடிமைகளாக உங்களை அடக்கி வைத்து விடும். போதைப் பொருட்கள் உங்களை சிறிது காலமே அடிமைப் படுத்தி, அவற்றின் முழுப்பிடியில் வைத்திருந்தாலும், மனக்கிளர்ச்சிகளோ உங்களை வாழ்க்கை முழுவதும் தம் பிடிப்பில் வைத்திருக்கும். எந்த கஷ்டமோ,நஷ்டமோ,தடைகளோ வந்தாலும், மனஉறுதி மற்றும் இறை நம்பிக்கையை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தியானத்தின் அனைத்து நோக்கமும், அர்த்தமும், இந்த பலதரப்பட்ட வலிமை பொருந்திய உணர்ச்சி வேகங்களிலிருந்து விடுதலை பெறுவதுதான்.
- பாபா