azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

There is no profit in simply controlling impulses. A cobra becomes harmless only when its fangs are plucked out; similarly, the roots of impulses must be burned. Only then can the aspirant attain the Brahman. Of course, even pure desires are a bond. But they are not hindrances, however many they may be. A thorn is removed by another and both are thrown out afterwards, right? So also, when impure impulses are overcome through the influence of pure impulses, one has to outgrow both. This means that even the purest of impulses, the craving for liberation, has to disappear in time. Only then, can you become Brahman. A shackle is a shackle, whether it is of iron or gold. That is to say, one should attain a stage when neither good nor bad will attract or repel. Anyone aiming at the realisation of God should practice the diminishing of impulses, the curbing of the mind, and must strive to understand the fundamental principle of Divinity.
- BABA
- BABA
மனதின் உந்துதல்களை கட்டுப்படுத்துவதால் மட்டும் பலனில்லை. நல்ல பாம்பின், விஷப் பற்களைப் பிடுங்கினால் தான், அது கெடுதல் செய்ய இயலாததாக ஆகிறது; அதே போல, உந்துதல்களை வேரோடு களைய வேண்டும். அதன் பின் தான் சாதகன் பிரம்மத்தை அடைய முடியும். தூய்மையான ஆசைகள் கூட ஒரு விதமான பந்தம் தான். ஆனால், அவை எவ்வளவு இருந்தாலும், ஒரு தடையாக இருப்பதில்லை. ஒரு முள்ளை மற்றொரு முள்ளால் தான் எடுக்கிறோம். ஆனால், அதன் பின் இரண்டையும் தூக்கி எறிந்து விடுகிறோம் அல்லவா? அதே போன்று, தூய்மையான உந்துதல்களின் தாக்கத்தைக் கொண்டு, தூய்மையற்ற உந்துதல்களை வென்ற பின் ஒருவர் இரண்டையும் விட்டு விட வேண்டும். இதன் பொருள், மிகவும் புனிதமான உந்துதலான, மோக்ஷத்தைப் பெற வேண்டும் என்ற வேட்கை கூட ஒரு கால கட்டத்தில் மறைந்தாக வேண்டும் என்பது தான். அதன் பிறகு தான் நீங்கள் பிரம்மமாக ஆக முடியும். பிணைப்பு என்பது, இரும்பால் ஆனதாக இருந்தாலும், தங்கத்தால் ஆனதாக இருந்தாலும், பிணைப்பே. அதாவது, எப்போது நல்லவையோ, தீயவையோ, ஒருவருக்கு விருப்போ, வெறுப்போ ஏற்படுத்தாது இருக்கிறதோ, அத்தகைய நிலையை ஒருவர் பெற வேண்டும். இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட எவரும், தமது உந்துல்களை படிப்படியாகக் குறைப்பது , மனதைக் கட்டுப் படுத்துவது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு, தெய்வீகத்தின் அடிப்படைக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள, கடும் முயற்சி எடுக்க வேண்டும்.
- பாபா