azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Attachment makes the mind dwell on the things of the world. When the mind is free of attachment, it remains unaffected by the objective world. The mind is like a cloth and there are three different impulses which colour it: sathwic, pure impulses which make it white; rajasic, restless tendencies that turn it red, while thamasic, slothful impulses that give it a black colour. Some people find these impulses extremely difficult to control even after many years of practice. If you are disturbed by such inclinations, you must fortify yourself with faith and act to conquer them by will power. Meditation and concentration can help you overcome these impulses.
- BABA
- BABA
பற்றுதல்கள் மனதை உலகியலான பொருட்களின் மீது ஈடுபாடு கொள்ளச் செய்கின்றன. பற்றுதல்கள் இன்றி மனம் இருக்கும் போது அது உலகத்தினால் பாதிப்படைவதில்லை. மனம் ஒரு துணி போன்றது. இதில் உந்துதல்கள் மூன்று விதமான நிறங்களைப் பதிக்கின்றன.'ஸத்வ' என்ற தூய்மையான குணம்,இதை வெள்ளை நிறமுள்ளதாக ஆக்குகிறது. 'ரஜோ' குணம், அதாவது சலனம் நிறைந்த இயல்புகள், இதை சிவப்பு நிறமுள்ளதாக மாற்றுகிறது. அசமந்தமான 'தமஸ்' என்ற உந்துதல்கள் இதற்கு கருப்பு நிறத்தை அளிக்கின்றன. சிலர், பல வருடங்களாகப் பயிற்சி செய்தும் இவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது என்று எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சுபாவங்களால், நீங்கள் பாதிக்கப் பட்டால், நம்பிக்கையின் மூலம் வலுவூட்டிக் கொண்டு, மனத் திண்மையின் மூலம் அவற்றை வெல்ல செயல்பட வேண்டும். தியானமும், முனைப்பும் இந்த உந்துதல்களை வெல்வதற்கு உங்களுக்கு உதவி புரிய வல்லவை.
- பாபா