azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

In this era of technology it is becoming increasingly difficult to lead a peaceful life; people are falling victim to various physical and mental ailments. Many people in the cities which are on the front line of civilization, have lost the delight of natural sleep. They experience only artificial sleep induced by tablets. Due to such excessive use of medication, heart and blood pressure problems are on the rise. People are becoming unhealthy wrecks who are lost in fear and anxiety. Drugs and pills are produced in millions, but the general health has not improved. In fact new varieties of illnesses have emerged and are developing fast. Only a few intelligent people have realized the efficacy of yoga and other spiritual practices. This they have confirmed through their own experience.
- BABA
- BABA
இன்றைய விஞ்ஞான உலகத்தில்,அமைதியாக வாழ்க்கை நடத்துவது மேலும் மேலும் கடினமான ஒன்றாக ஆகிக் கொண்டே வருகிறது. மனிதர்கள் பல விதமான உடல் மற்றும் மன ரீதியான நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். கலாசாரத்தில் முன்னிலையில் இருக்கின்ற பல நகரங்களில் உள்ள மக்கள் இயல்பான தூக்கத்தின் மகிழ்ச்சியை இழந்து விட்டார்கள். மாத்திரைகளால் தூண்டப் பட்ட செயற்கையான தூக்கத்தை அனுபவிக்கிறார்கள். இப்படிப் பட்ட அபரிமிதமான மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் இருதயம் மற்றும் இரத்தக் கொதிப்பு பிரச்சனைகள் பெருகி வருகின்றன.கவலை மற்றும் பயத்தில் மூழ்கி ,ஆரோக்கியமின்றி மனமுடைந்தவர்களாக மனிதர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். மருந்துகளும் ,மாத்திரைகளும் லக்ஷக் கணக்கில் உற்பத்தி செய்யப் படுகின்றன ஆனால், பொதுவான ஆரோக்கியம் முன்னேற்றம் அடையவில்லை. உண்மையில், புதுவிதமான நோய்கள் தோன்றி வேகமாக வளர்ந்து வருகின்றன . புத்திசாலியான சிலரே யோகம் ,மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளின் நற்பலனைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் தங்களது சொந்த அனுபவங்களின் மூலம் உறுதி செய்துள்ளார்கள்.
- பாபா