azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 10 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 10 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Remember, the one who is a slave to impulses and Vasanas (tendencies) is devoid of Jnana (wisdom). In truth, he or she is a weakling! However, as soon as impulses are uprooted, you can earn back the divine nature that was lost by neglect. The impulses invade the realm of the heart; they cause endless trouble. They remind you of pleasures, agitating the memory of past experiences, and you start craving them again. The cravings make the senses and the mind to engage in brisk activities. So you attempt to collect and enjoy the things that you crave. All this takes place in the twinkling of an eye, so to say. The impulses operate so subtly and so powerfully. The impulses are the cause of all the objective happiness. If they are present, all purity is ruined; if they are absent, the mind is pellucid and pure.
- BABA
- BABA
மனதின் வாஸனைகளுக்கும், உந்துதல்களுக்கும் அடிமையானவர்கள் ஞானமற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உண்மையில் அப்படிப் பட்ட ஆணோ,பெண்ணோ பலவீனமானவர்களே. ஆனால், அந்த உந்துதல்களை வேரோடு களைந்தவுடனேயே, உதாசீனத்தால் இழந்த தெய்வீக நிலையை நீங்கள் திரும்பப் பெற முடியும். இந்த உந்துதல்கள் இதயத்தை ஊடுருவி, முடிவே இல்லாத பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. அவை பழைய அனுபவங்களின் நினைவுகளைக் கிளறி, பெற்ற இன்பங்களை நினைவு படுத்துகின்றன; உடனே நீங்களும் அவற்றிற்காக மறுபடியும் ஏங்க ஆரம்பிக்கிறீர்கள். இந்த ஏக்கம் புலன்களையும் மனத்தையும் துடிப்பான செயல்களில் ஈடுபடுத்துகின்றன. எனவே, நீங்கள் விரும்பிய பொருட்களை அடைந்து அனுபவிக்க முயற்சி செய்கிறீர்கள்.இவை அனைத்தும் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து விடுகிறது எனலாம். இந்த உந்துதல்கள் மிகவும் நுண்ணியதாகவும்,சக்தி படைத்ததாகவும் இயங்குகின்றன. இவையே உலகியலான இன்பங்களுக்குக் காரணம். இவை இருந்தால் தூய்மை அழிந்து விடுகிறது; இவை இல்லை என்றால்,மனம் தூய்மையாகவும் தெளிவாகவும் ஆகிவிடுகிறது.
- பாபா