azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The giant tree called mind has two seeds, Vasana (impulse) and Prana (breath). The seed becomes the tree; the tree yields the seed. The breath moves because of the impulses; the impulses operate because of the breath. If one of these is destroyed, so is the other. So, to purify the impulses and make the mind free from negative influences, Ajnana (ignorance) has to be transformed. Ignorance does not exist alone; it has an offspring: Ahamkara (ego or selfishness), a demon. That demon has two children, Raga (attachment or passion) and Vasana, (impulse). They are closely interrelated sisters. Through attachment, one gets the feelings of me and mine, the feelings provoke desire, and desires breed worry. Therefore, you must remove ego, attachment and the impulses have to be annihilated. Through meditation and spiritual practices, you can conquer ignorance, ego, attachment, and purify the impulses. This will make you liberated.
- BABA
- BABA
மனம் என்ற மாபெரும் மரத்தில் இரண்டு விதைகள் உள்ளன; ஒன்று வாஸனா ( உந்துதல்கள்) மற்றொன்று ப்ராணா (உயிர்மூச்சு) . விதை மரமாகிறது; மரம் விதையை அளிக்கிறது. ப்ராணா, வாஸனைகளால் செயல்படுகிறது. வாஸனைகள் ப்ராணனினால் இயங்குகின்றன. இதில் ஒன்று அழிக்கப் பட்டாலும், மற்றொன்றும் அழிந்துவிடும். வாஸனைகளைத் தூய்மைப் படுத்தி, மனதை எதிர்மறையானவற்றின் தாக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால், அஞ்ஞானத்தை மாற்ற வேண்டும். அஞ்ஞானம் தனித்து இருப்பதில்லை; அதற்கு அஹங்காரம் என்ற அசுரப் பிள்ளை உண்டு. இந்த அசுரனுக்கு பற்றுதல்( ராகா ) மற்றும் வாஸனை என்று இரண்டு பிள்ளைகள். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று உறவான சகோதரிகள். பற்றுதல்களின் காரணமாக, ஒருவருக்கு 'தான்' 'எனது' என்ற உணர்வுகள் தோன்றி, அதனால் ஆசைகள் தூண்டப் படுகின்றன; ஆசைகள் கவலைகளை உருவாக்குகின்றன. எனவே, அஹங்காரத்தை விடுத்து, பற்றுதல்களையும், உந்துதல்களையும் அழித்திட வேண்டும். தியானம் மற்றும் ஆன்மீக சாதனைகளின் மூலம், நீங்கள் அஞ்ஞானம், அஹங்காரம், பற்றுதல்கள் ஆகியவற்றை வென்று, வாஸனைகளைத் தூய்மைப் படுத்த முடியும். இது உங்களை விடுதலை பெற்றவர்களாக ஆக்கும்.
- பாபா