azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Enormous quantities of water are turned into steam by the hot rays of the sun, bundled into clouds, and returned to the earth as rain. This helps the harvesting of grain and renders the land green with vegetation. The wonder is that in spite of this tremendous uptake and downpour, the level of the ocean does not go down even by an inch. Furthermore, even though thousands of live rivers pour their waters into the seas, the level is not seen to increase. Similarly, the persons who have supplemented their knowledge of the scriptural texts with the awareness of their validity acquired by practising the lessons contained in them are never affected by praise or blame, whatever the source and quantity. Their hearts will stay pure, unaffected and calm.
- BABA
- BABA
பேரளவிலான நீர் வெப்பமான சூரிய கிரணங்களால் நீராவியாக்கப் பட்டு, மேகக் கூட்டங்களாக ஒன்றிணைந்து, பூமிக்கே திருப்பி மழையாகப் பொழிகின்றது. இது பயிர்களை அறுவடை செய்யவும், நிலத்தைத் தாவரங்களால் பசுமையாக்கவும் உதவுகின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு பெரிய அளவில் நீரை வெளியே எடுத்தாலும் பின்பு மழையாகப் பொழிந்தாலும், கடலுடைய நீர் மட்டம் ஒரு அங்குலம் கூடக் குறைவதில்லை. மேலும் ஆயிரக்கணக்கான நதிகள் கடலில் தங்களை நீரைக் கொட்டினாலும், அதன் நீர் மட்டம் உயர்ந்ததைப் போலக் காணப்படுவதில்லை. இதே போன்று, தாங்கள் புனித நூல்களின் மூலம் பெற்ற அறிவை, அவற்றில் உள்ள உபதேசங்களைக் கடைப் பிடிப்பதன் மூலம், அவற்றின் ஏற்புடைமையைப் புரிந்து கொண்டு, மேம்படுத்திக் கொண்டவர்கள், எங்கிருந்து வந்தாலும், எவ்வளவானாலும், புகழ்ச்சி அல்லது இகழ்ச்சியால் பாதிக்கப் பட மாட்டார்கள். அவர்களது இதயங்கள் தூய்மையாகவும், பாதிப்பின்றியும், அமைதியாகவும் இருக்கும்.
- பாபா