azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 05 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 05 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Teachers! You must inspire your students by your example. You should combine practice with precept, like the physical instructor who demonstrates the exercises the students should perform. Impart to your students the teachings of great and noble souls. Education should be for elevation. It should not be to obtain degrees to earn a living, but should be a preparation for a good life. You should teach students: discipline, observance of humility and respect, and instill in them the spirit of service to society and the sense of fellowship. Make your children imbibe confidence and courage. Unify them through love. Let there be no room for anger, jealousy or hatred within you. Teach the children the three P’s: Purity, Patience, and Perseverance. Armed with these three qualities, your students can protect the nation better than any army or atom bombs. When Truth and Righteousness are protected, the nation will be secure.
- BABA
- BABA
ஆசிரியர்களே ! நீங்கள் உங்களது மாணவர்களுக்கு நீங்களே முன்னுதாரணமாக இருந்து, ஊக்குவிக்க வேண்டும். உடற்பயிற்சி ஆசிரியர் எவ்வாறு மாணவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகளைச் செய்து காட்டுகிறாரோ,அவ்வாறே நீங்களும் உங்களது போதனைகளை நீங்களே கடைப்பிடித்தல் வேண்டும். உயர்ந்த சான்றோர்களின் போதனைகளை உங்களது மாணவர்களுக்குப் புகட்ட வேண்டும்.கல்வி உயர்ந்த நிலையைப் பெறுவதற்காகவே இருக்க வேண்டும். பணம் ஈட்டி வாழ்வதற்கான பட்டங்களைப் பெறுவதற்காக அன்றி, நல்ல வாழ்க்கையை நடத்துவதற்கான முன்னேற்பாடாக கல்வி இருக்க வேண்டும்.மாணவர்களுக்கு நீங்கள் ஒழுக்கம்,பணிவு மற்றும் மரியாதையுடன் நடத்தல் ஆகியவற்றை போதித்து, சமுதாய சேவை,மற்றும் கூட்டுணர்வு மனப்பாங்கை அவர்களுக்குள் பதிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை உண்டாக்க வேண்டும். அன்பின் மூலம் அவர்களை ஒன்று சேருங்கள். கோபம்,பொறாமை,வெறுப்பு போன்றவற்றிற்கு இடம் அளிக்காதீர்கள். தூய்மை,பொறுமை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை குழந்தைகளுக்குப் போதியுங்கள். இந்த நற்குணங்களுடன் கூடிய உங்களது மாணவர்கள் ராணுவம் மற்றும் அணு ஆயதங்களை விடவே, சிறப்பாக இந்த நாட்டைப் பாதுகாப்பார்கள். எப்போது சத்யமும்,தர்மமும் காக்கப் படுகிறதோ, நாடும் பாதுகாப்பாகவே இருக்கும்.
- பாபா