azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Sep 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The word “Veda” originated from the root “Vid,” meaning “to know,” This originated from the phrase, “Vidam thu anena ithi Vedah,” meaning, “That which reveals and makes clear all knowledge is Veda.” The sacred Veda instructs everyone, all that is required for one’s spiritual advancement. It also instructs one in the means and methods to overcome all sorrows and grief, and attain peace. Since the spiritual quest was sincerely pursued along with material objectives, the sages of the past had the good fortune of receiving the Vedic message. Those ancient masters were so selfless and full of compassion and love that they shared what they had heard and enjoyed with all who approached them. Vedas are like the force of gravitation, present everywhere, at all times. Vedic Message can be received by anyone, as a result of their Sadhana (spiritual practices) as well as their capacity to concentrate and to experience the bliss resulting from practising it.
- BABA
- BABA
'வேதம்' என்ற வார்த்தை, ' வித்' அதாவது, ' அறிவது' என்ற பொருள் கொண்ட மூல வார்த்தையிலிருந்து தோன்றிய ஒன்று. இது ' விதம் து அநேந இதி வேதா:' என்ற,'எந்த ஒன்று அனைத்து அறிவையும் வெளிப்படுத்தி, தெளிவுபடுத்துகிறதோ அதுவே வேதம்' என்ற பொருள் கொண்ட வாக்கியத்திலிருந்து தோன்றியதாகும். புனிதமான வேதங்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கான அனைத்தையும் போதிக்கின்றன. மேலும் துன்பங்கள் மற்றும் துயரங்களிலிருந்து மீண்டு, அமைதி பெறுவதற்கான வழிவகைகளையும் போதிக்கின்றன. உலகியலான இலக்குகளுடன் கூடவே ஆன்மீகத் தேட¨லையும் தீவிரமாகத் தொடர்ந்ததால் பண்டைய முனிவர்கள் வேதங்களைப் பெற்றுக் கொள்ளும் அதிர்ஷ்டத்தை அடைந்தனர். சுயநலமற்ற,கருணையும் அன்பும் நிறைந்த அந்த புராதன குருமார்கள் , தாங்கள் கேட்டு மகிழ்ந்தவற்றை தங்களிடம் வந்த அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்கள். வேதங்கள் புவி ஈர்ப்பு சக்தியைப் போன்று எல்லா இடங்களிலும்,எக்காலத்திலும் உள்ளவை. தமது ஆன்மீக சாதனை, முனைப்பு மற்றும், அவற்றை நடைமுறைப் படுத்துவதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை அனுபவிக்கும் திறன் ஆகியவற்றின் பலனாக எவரும் வேதங்களைப் பெறலாம்.
- பாபா
- பாபா